728 X 90 Ad slot
Thursday, June 2, 2011
Seeman Vijayalakshmi - Love Issue... !
(01.06.2011)நேற்று மாலை 4 மணி அளவில் தினசரி பத்திரிகையாளர்கள் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்புக்கு காரணம் சீமான் மீது பிரபல நடிகை விஜயலட்சுமி சென்னை காவல்துறை ஆனையாளர் அலுவலகத்தில் பரபரப்பான ஒன்றை செய்திருகிறார்.
அந்தப் புகாரில், கடந்த மூன்று ஆண்டுகளாக என்னுடன் நெருங்கிப் பழகிவிட்டு, இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருபதாகவும் பேசிக்கொண்டார்கள்.
இதனால் உடனடியாக போலீஸ் கமிஷனர் அலுவலத்தின் ஊடக கட்டுப்பாடு அறையை போனில் தொடர்புகொண்டு கேட்டனர் பல செய்தியாளர்கள். ஆனால் “ அப்படியொரு புகாரே வரவில்லை. இது புரளி “ என்று பதில் தரப்பட்டதாம் கமிஷனர் அலுவலகத்தில். இதில் ஏதோ உள்குத்து இருப்பதாக நினைத்த, அதிக எண்ணிகையில் விற்பனையாகும் சில செய்திதாள்களின் செய்தியாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் படையெடுத்து சம்பந்தப்பட்ட ஊடகதொடர்பு அதிகாரியிடமும், போலீஸ் பி.ஆர்.ஓக்களிடமும் கேட்க, அவர்கள் கமிஷனரிடம் கேட்டு சொன்ன பதில் “ அப்படியொரு புகார் கமிஷனரிடம் இதுவரை வரவில்லை”.
ஆச்சர்யப்பட்ட செய்தியாளர்கள் சீமான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு என்று நிருபர்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய பிரபல நாடக நடிகரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருக்கும் நடிகருமான அந்த நபரிடம் கேட்க, “ பொறுமையாக இருங்கள், நிச்சயம் இப்படியோரு புகார் வந்ததை காவலதுறை ஒப்புக்கொள்ளும்” என்று சொன்னாராம். அதேபோல இரவு பதினோரு மணிக்கு சீமான் மீது நடிகை விஜய லட்சுமி கொடுத்த புகார் உண்மைதான் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட, பரபரப்பாக இன்று காலை வெளியான சீமானுக்கு எதிர்நிலையில் ஊடகக் கொள்கைகொண்ட அத்தனை செய்தித் தாள்களும் இந்த செய்தியை பிரசுரித்துள்ளன.
முக்கியமாக சீமானின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் காங்கிரஸ் வளர்ச்சிக்கு தற்போது ஒரே தலைவலியாக இருக்கும் சீமானின் இமேஜை டேமேஜ் செய்யவே இந்த செட்- அப்பை செய்திருப்பதாக அரசியல் செய்தியாளர்களே அடித்துச் சொல்கிறார்கள். இந்த விஷயத்தில்அந்த நடிகர் காட்டிய ஆர்வமே இதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது என்கிறார்கள். சீமான் மீது இப்படியொரு புகார் கொடுக்கப்பட இருப்பது அவருக்கு எப்படித்தெரியும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.
இதுஒருபுறம் இருக்க யார் இந்த விஜயலட்சுமி என்று விசாரித்தால், விஜய் –சூர்யா இணைந்து நடித்த ஃபிரெண்ட்ஸ் படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர். அந்தப்படத்துக்குப் பிறகு தமிழில் ஆறு தோல்விப் படங்களில் நடித்தார். தம்பி படத்துக்குப் பிறகு சீமான் இயக்கிய வாழ்த்துகள் படத்தில் ஒரு சிறு காதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்தார். விஜலட்சுமியை அவரால் கதாநாயகியாக ஜொலிக்க முடியாத நிலையில், பல சீரியல்களிலும் தலை காட்டிய விஜயலட்சுமி, சன் டிவியின் தங்கவேட்டை நிகழ்சியை சிறிதுகாலம் தொகுத்து வழங்கியதன் மூலம் சன் டிவிக்கு இணக்கமாக செயல்படக்கூடியவர் என்கிறார்கள். கடைசியாக ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்த இவர், சன் டிவியில் மெகா தொடார் தயாரித்து, நடித்து ஒளிபரப்ப ஸ்லாட் கேட்டிருந்தாராம்.
விஜயலட்சுமியின் புகார் குறித்து சீமானின் வாழக்கறிஞர் சந்திரசேகரன் உத்தியோகபூர்வமான விளக்கத்தை நமக்கு கொடுத்தார். நடிகை விஜயலட்சுமி காவல் துறையில் புகார் கொடுத்தது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. விஜயலட்சுமி, அவரது அக்காள் விவாகரத்து வழக்கு தொடர்பாக உதவி கேட்டு, சீமானை ஒருமுறை சந்தித்து பேசினார். அது தொடர்பாக உதவி செய்யும்படி, சீமான் என்னிடம் கேட்டுக்கொண்டார். அந்த ஒருமுறை மட்டுமே விஜயலட்சுமி சீமானை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
சீமானுக்கு வீடு, அலுவலகம் இரண்டும் ஒன்றே. அங்கே யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக திமுக ஆட்சியில் இருந்த உளவுத்துறைக்கு. அவர்களே இதைக்கேட்டால் சிரிப்பார்கள். அந்த ஒரு சந்திப்புக்கு பிறகு, அவர் சீமானை பார்க்கவே இல்லை. சீமான் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
அவரது பெற்றோரும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். இதை கெடுக்கவும், அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. யாரோ விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளனர். புகார் கொடுத்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை சட்டப்பூர்வமாக சந்திப்போம். சீமானின் புகழை கெடுக்கும் வகையில் செயல்பட்ட விஜயலட்சுமி மீது ரூ.5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர உள்ளோம். சீமான் குற்றமற்றவர் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் ”என்றார். தற்போது இந்த புகாரை வளசரவாக்கம் போலீஸ் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “Seeman Vijayalakshmi - Love Issue... !”
Post a Comment