728 X 90 Ad slot
Wednesday, April 6, 2011
Chandrababu naidu Support AIADMK alliance and Speak in Tamil in Coimbatore Kovi Meeting
In Coimbatore AIADMK Alliance Meeting 06.04.2011 : Mr.Chandrababu Naidu Support AIADMK Alliance and speak in Tamil. He Said 200% Confidant AIADMK Alliance Form TN New Government.
He also added that MGR and NTR are Friend. Similar Like that AIADMK and Telugu Desham Party.
கோவை: அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தேசிய, மாநில தலைவர்கள் பங்கேற்று, முதன்முதலாக ஒரே மேடையில் தோன்றிய பிரமாண்டமான தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. பலரும் எதிர்பார்த்தது போலவே, இக்கூட்டத்தில் பங்கேற்காமல் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் புறக்கணித்தார்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார பிரமாண்ட பொதுக் கூட்டம், கோவை வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மா.கம்யூ., அகில இந்திய பொதுச் செயலர் பிரகாஷ் கராத், மா.கம்யூ., மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன், இ.கம்யூ., அகில இந்திய பொதுச் செயலர் பரதன், தேசிய செயலர் ராஜா, இ.கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். அ.தி.மு.க., கூட்டணியில், அதிக தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய கட்சியான தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தார். அவர் சார்பில், தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பங்கேற்றார். "எப்படியும் கடைசி நேரத்திலாவது விஜயகாந்த் வந்துவிடுவார்' என்ற எதிர்பார்ப்பு, நம்பிக்கையுடன் மைதானத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான தே.மு.தி.க., தொண்டர்கள், "கேப்டன்' வராததை அறிந்து கடும் ஏமாற்றமடைந்தனர்.பிரமாண்ட கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்காதது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் பேசிய தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், ""விஜயகாந்த், நாகப்பட்டினம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அங்கு பிரசாரம் செய்ய ஏற்கனவே ஒப்புகொண்டபடியால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு இந்த கூட்டத்துக்கு அவரால் வரமுடியவில்லை. இது தொடர்பாக விஜயகாந்த், இன்று (நேற்று) காலையில் இருந்து இரண்டு முறை என்னிடம் பேசினார். ""ஆனால், ஜெயலலிதாவும், விஜயகாந்தும் ஒரே மேடையில் தோன்றாதது குறித்து, தி.மு.க.,வினர் சந்தேகம் கிளப்பி வருகின்றனர். அவர்கள், மே 14 வரை காத்திருக்க வேண்டும். அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்கும் நாளில் ஒரே மேடையில் தோன்றுவார். இன்று இந்த பிரமாண்டமான பிரசார பொதுக்கூட்டத்துக்கு விஜயகாந்த் வராவிட்டாலும் கூட, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தே அவர் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்,'' என்றார். இவரது விளக்கத்தை கேட்டு, மேடையில் இருந்த அ.தி.மு.க.,பொதுச் செயலர் ஜெயலலிதா சிறிதாக புன்னகைத்தார். இவரது பேச்சை வரவேற்கும் விதமாக மற்ற தலைவர்கள் கைதட்டினர்.
திட்டமிட்டு புறக்கணிப்பு? கூட்டணி கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள், ஒரே மேடையில் தோன்றும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் துவங்கியது முதலே, இக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா என்ற கேள்வி தோழமைக் கட்சியினர் மத்தியில் எழுந்தது. தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்து கொண்டிருக்கும் போதே அ.தி.மு.க., தலைமை, தங்களது கட்சிகளின் சார்பில், 160 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது முதலே, விஜயகாந்த் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கூட்டத்தில் பங்கேற்காமல் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது.If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “Chandrababu naidu Support AIADMK alliance and Speak in Tamil in Coimbatore Kovi Meeting”
Post a Comment