728 X 90 Ad slot

Wednesday, July 20, 2011

'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு

தேர்தல் பிரச்சாரத்திற்காக கிளிநொச்சியில் முகாமிட்டிருக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவிருந்த இசைநிகழ்ச்சியில், தமிழக பின்னணி பாடகர்கள், மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் பாடகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்று சென்னையிலிருந்து, இன்று காலை கொழும்பு சென்ற அவர்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமறன் உள்ளிட்டோரும் கண்டனம் விடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக இசை நிகழ்ச்சியை இரத்து செய்து விட்டு கொழும்பு திரும்பிய மனோ குழுவினர், ராஜபக்ச இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்பது தெரியாது என கூறியுள்ளனர்.

இது குறித்து பின்னணி பாடகர் மனோ தெரிவிக்கையில் ' கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரிந்தது.

நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

யாழ்.உள்ளூராட்சி தேர்தல் எதிர்வரும் ஜூலை 23ம் திகதி நடைபெறுகிறது. 1982ம் ஆண்டு ஜூலை 23ம் திகதியே கறுப்பு ஜூலை இனக்கலவரம் நடைபெற்று மாபெரும் இனப்படுகொலை இடம்பெற்றது.

அதே நாளில் தேர்தல் நடத்தி வெற்றுபெறுவோம், என காட்டும் பிரச்சார முனைப்பில், வி.புலிகளின் முன்னைய தலைநகர் கிளிநொச்சில் இந்த களியாட்ட இசைநிகழ்ச்சியை ராஜபக்ச தரப்பினர் ஒழுங்கு செய்திருந்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.

Wednesday, July 20, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...