728 X 90 Ad slot

Monday, May 9, 2011

magaram - guru peyarchi 2011 may

மகரம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 பாதம் முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மகர ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 10-வதாக வரும் பெண் ராசியான மகரத்தில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் உருவம் மான் தலையுடன் கூடிய முதலை போல் தோற்றமளிக்கும். மகரத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மகரத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சனி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட திசை-மேற்கு. அதிர்ஷ்ட எண்-8. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

மகர ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம் 1, 2, 3, 4 பாதங்கள். அவிட்டம் 1, 2 பாதங்கள். உத்திராடம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் எதற்கும் அஞ்சா நெஞ்சம் உடையவர்கள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும்வரை பசியோ, தூக்கமோ இவரது கவனத்தைக் கலைத்துவிட முடியாது. தருணத்திற்கேற்ற தக்க முடிவுகளை நொடியில் எடுக்கும் திறன் உடையவர்கள். உத்திராடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உறுதியான மனம் படைத்தவர்களாகவும், எதிலும் தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் திறமை பெற்றவர்களாகவும், பல்துறை அறிவைத் தேடிப்படிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உத்திராடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எந்த செயலை எடுத்தாலும் அது நல்ல விதமாக முடிய தமது முழு உழைப்பையும் அள்ளி வழங்குவார்கள். தூண்டத் தூண்டச் சுடர்விடும் திரிபோல, இவர்களும் தூண்டிவிட்டால் வாழ்க்கையில் நன்கு பிரகாசிப்பார்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சந்திரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும்போது பலவற்றையும் சிந்திப்பவராகையால் தீர்க்கமான முடிவெடுத்து, பிரச்சினைகளைத் தீர்த்து விடுவார்கள். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவாதிரை நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் ரோகிணி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம். அதிர்ஷ்ட மலர்-அல்லி. அனுகூல தெய்வம்-பார்வதி. அதிர்ஷ்டக் கல்-முத்து. அதிர்ஷ்ட நிறம்-வெள்ளை. அதிர்ஷ்ட எண்-4. திருவோணம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தாய், தந்தை மீது அதிக அன்பும் பக்தியும் கொண்டிருப்பார்கள். இவர்கள் குடும்ப உயர்வுக்காகவும், நலனுக்காகவும் அதிகம் பாடுபடும் குணம் உடையவர்களாக இருப்பார்கள். திருவோணம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள். ஆன்மீகம், ஆலயம், தெய்வத் திருப்பணிகளுக்காகப் பணியாற்றுவதில் அதிக ஈடுபாடும் ஆர்வமும் கொண்டிருப்பார்கள். பிறர்க்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். திருவோணம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கலை, இலக்கியம் ஆகியவற்றின் மீது தனி ஈடுபாடு உண்டு. விஷயங்களை வெகு žக்கிரமாக கிரகிக்கும் தன்மை உடையவர்கள். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து, செயலாற்றுவார்கள். திருவோணம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கெனப் பாடுபடாவிட்டாலும் பிறருக்காக ஈடுபடும் விவகாரங்களில் மிகவும் உற்சாகமாக செயலாற்றும் திறன் கொண்டவர்கள். பெரும்புகழைத் தேடவேண்டம் என்பது, இவர்களது இலட்சியமாக இருக்கும். அவிட்டம்- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை செவ்வாய் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தைரியம் உடையவர்களாகவும், பிறரிடம் வேலை வாங்கும் திறமை உடையவர்களாகவும் இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- மிருகžரிடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்க ஆகாத நட்சத்திரங்கள் 3, மிருகžரிடம், சித்திரை, அவிட்டம். மற்ற 24 நட்சத்திரங்களும் பொருந்தும். அதிர்ஷ்ட மலர்-செண்பக மலர். அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம். அனுகூலத் தெய்வம்-சுப்பிரமணியர். அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, செம்மை. அதிர்ஷ்ட எண்-5. அவிட்டம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் கருத்துகளைத் தயக்கமின்றி வெளிப்படையாக சொல்லும் குணமுடையவர்கள். கோபக்காரர்களாக இருந்தாலும் நியாயத்தைப் பின்பற்றி நடப்பார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் திறமைக்கு உரிய அங்கீகாரமும், உழைப்புக்கு உரிய மரியாதையும் கிடைக்கும் வரை பாடுபடுவார்கள். பிறருக்கு உதவி செய்கையில் தன்னுடையத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு விடுவார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 2ல் இருந்து வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 3ம் வீட்டுக்கு மாறுவதால், எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் யோசனை செய்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். சின்ன சின்ன உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால், ஆரோக்கியம் žராக இருக்கும். மன உறுதியுடன் செயல்பட்டால், பிரச்சினைகள், தடைகள் ஆகியவற்றைத் தாண்டி வெற்றியின் பக்கம் உறுதியாக செல்ல இயலும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளிப்படையாகப் பேசாமலிருந்தால், பிரச்சினைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உயர்வு உங்கள் பேச்சின் தன்மையைப் பொறுத்தே அமையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளால் சில சங்கடங்கள் உருவாகலாம். சிரமங்கள் இருந்தாலும், பிறர்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள். பணி சுமை கூடுவதால், எரிச்சலும், அசதியும் அவ்வப்போது வந்து போகும். மூத்தோருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். கோபம், குதர்க்கத்திற்கு இடம் கொடாமல் இதமான அணுகு முறையைக் கடைபிடித்தால், இனிய பலன்கள் அதிகம் பெறலாம்.

பெண்களுக்கு: சில சில்லறைத் தொந்தரவுகள் இருந்தாலும், குடும்ப வளம் žராகவும், சிறப்பாகவும் இருக்க நீங்கள் அனுசரித்துச் செல்வது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக வைத்தால், பொருள் இழப்பு, மனக் கஷ்டம், இரண்டையும் தவிர்த்து விடலாம். பிள்ளைகளுக்கு அதிக பணம் தருவதைக் குறைத்துக் கொண்டால், வேண்டாத பழக்கங்கள் அவர்களின் வாழ்வை பாழாக்காமல் இருக்கும். வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருப்பதால், புதிய செலவுகளை இழுத்து விட்டுக் கொள்ளாதீர்கள்.

மாணவர்களுக்கு: உங்கள் பிரச்சினைகளை நம்பிக்கையானவர்களுடன் ஆலோசனை செய்து தீர்வு காண்பது நல்லது. இல்லையெனில் மற்றவரின் கேலிக்கு ஆளாக நேரிடும். பிறரின் உடைமைகளுக்கு பொறுப்பேற்பதை நாசுக்காகத் தவிர்த்து விடுங்கள். விடாமுயற்சியால் சில சலுகைகளை அடையும் நிலை உண்டாகும். எந்தப் பிரச்சினையையும் வளர விடாமல் உடனடித் தீர்வு காணுதல் புத்திசாலித்தனம். நட்பு விஷயத்தில் எதிலும் அளவாக இருந்தால் உறவுகள் எப்போதும் žராக இருக்கும்.

வியாபாரிகளுக்கு: உங்களைத் தேடி வரும் வாய்ப்புகளை தக்க வைத்துக்கொள்ள புதிய யுக்திகள் தேவைப்படும். உடனிருப்பவர்கள் உங்கள் ஏற்றத்திற்கு உறுதுணையாக அமைவது என்பது நீங்கள் நினைத்தது போல் இருக்காது. எனவே பிறரை நம்பி செயல்படுவதைத் தவிர்த்து விடவும். வாகன வசதியின் குறைவு காரணமாக சரக்குகளை அனுப்புவதில் சில தடைகள் தோன்றி மறையும். தொழிலில் தோன்றும் சின்ன பிரச்சினைகளை பிறர் பெரிதாக்க இடம் கொடாதீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வராமலிருந்த வரவுகள் வந்து சேர்ந்தாலும், அவை யாவும் செலவுக்கே சரியாகிவிடும் வேண்டாத பகை பெரிதாகாதவாறு சமாதானக் கொடியைக் காட்டி விட்டால், அலுவலகச்சூழலில் இருக்கும் இறுக்கம் தானே விலகிவிடும். கேட்காமலே உதவி செய்தாலும், குறை சொல்பவர்களின் குற்றச்சாட்டை கேட்க நேரிடும். சலிப்பும் வெறுப்பும் சில சமயம் உங்கள் உற்சாகத்தைக் குறைத்தாலும், உங்கள் பணியில் கவனமாய் இருந்தால், உயரதிகாரிகளின் நல்லாதரவு கிட்டும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயலில் இறங்கினால், எடுத்த காரியம் எல்லாம் வெற்றிகரமாக முடியும்.

கலைஞர்களுக்கு: நீங்கள் எதிர்பார்த்த சில நன்மைகளும் ஒப்பந்தங்களும் கையில் வரும் வரை சிறு கலக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். பிரச்சினைகளை சமாளித்து உங்கள் பெயர், திறமை இரண்டையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டி வரும். முன்னேற்றத்திற்கான திட்டங்களில் முனைப்பாக செயல்படுவது புத்திசாலித்தனம். பயணங்களின் போது புதிய உணவு வகைகளுக்கு அருகில் செல்லாமலிருந்தால், ஜ“ரணக் கோளாறுகள் இல்லாமல் உடல் நிலை žராக இருக்கும்.

விவசாயிகளுக்கு: நீண்ட காலப் பயிர்களைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், குறுகிய காலப் பயிர்களைத் தேர்வு செய்தால், கிடைக்கின்ற லாபம் மற்றும் மகசூல் குறையாமலிருக்கும். பயிர்களுக்கான விதைகளைத் தரமான இடத்திலிருந்து வாங்குவதில் கவனமாக இருக்க, பூச்சித் தொல்லை முதலியவை அதிகம் தலை காட்டாமல் இருக்கும். குத்தகைக்கு பயிர்களை விடுவதிலும், எடுப்பதிலும் கவனமாக இருந்தால் போட்ட முதலீடுக்கு உரிய லாபத்தை எடுத்து விடலாம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: அதிகமாக ஆசைப்படுதலையும், ஆடம்பரச் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக்குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். விடுபட்ட சலுகைகளைப் பெறுவதற்காக அதிகம் போராடும் நிலை இருக்கும். சட்ட திட்டங்களை மீறிய செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துக்களின் பராமரிப்பில் தனி கவனம் செலுத்தி வந்தால், புதிய தொல்லைகள் முளைக்காமலிருக்கும்.

பரிகாரங்கள்: ஒளிக் கடவுளாம் சூரியனை அவர்க்குகந்த நாளாம் ஞாயிறு அன்று வழிபட நலம் பல கூடும். செவ்வாயன்று முருகனின் கோவிலில் தீபம் ஏற்றி வர, சிறப்பான பலன்கள் தானே உங்களைத் தேடி வரும். குரு தரும் பலனை சாதகமாக ஆக்கிக்கொள்ள தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் வணங்கி வாருங்கள்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “magaram - guru peyarchi 2011 may”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...