728 X 90 Ad slot

Monday, May 9, 2011

kumbam - guru peyarchi 2011 may

கும்பம்
(அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம் முடிய)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

கும்ப ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 11-வதாக வரும் ஆண் ராசியான கும்பத்தில் அமைந்திருக்கும் நட்சத்திரக் கூட்டம் பார்ப்பதற்கு ஒரு மனிதன் மண் கலசத்திலிருந்து நீரைக் கொட்டுவது போல் இருப்பதால் கும்பம் என்று பெயரிட்டனர்கள். கும்பத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் பிறர் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாதவர்கள். žர்திருத்தக் கொள்கைகளில் விருப்பமுள்ளவர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை அதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கும்பத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சனி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட திசை-மேற்கு. அதிர்ஷ்ட எண்-8. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

கும்ப ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம் 1, 2, 3, 4 பாதங்கள். பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள். அவிட்டம் 3-ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிட மாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள். தம்முடைய திறமையினால் உயர்ந்த அந்தஸ்தை அடைந்திடுவார்கள். அவிட்டம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அதிக மூலதனமில்லாமலேயே பெரும் நிதியை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பைத் தேடிக்கொள்வார்கள். வணிகத்துறையிலும், கலைத்துறையிலும் இவர்கள் புகழுடன் விளங்குவார்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை செயலினால் அன்றி சொல்லால் இவரை வசமாக்குவது கடினம். எவ்விதக் கடின வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். நியாயமும், மத்தியஸ்தமும் இவருடைய இயற்கையான பொக்கிஷங்கள் ஆகும். எதையும் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சித் திறனுடையவர். எக்காரியத்திலும் நல்லது கெட்டது என இரண்டையும் அலசிப் பார்த்துப் பிறகு செயலில் ஈடுபடுவார்கள். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவோணம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி. அதிர்ஷ்ட மலர்-மந்தாரை. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்டக் கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்கள்: 8, 9. சதயம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள். ஆதலால், நேர்மையற்ற செயல்களும் நேர்மையற்றவர்களின் உறவும் இவருக்குப் பிடிக்காதவை. அடுத்தவர்களின் திறமை மற்றும் கல்விக்கு உரிய மரியாதை கொடுப்பார்கள். சதயம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் தன் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வரை பாடுபடவும் தயங்க மாட்டார்கள். சிக்கலான விஷயங்களுக்கு சட்டென்று முடிவுகாணும் தனித்திறமை உடையவர்களாக இருப்பார்கள். சதயம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள். கல்வியில் உயர்ந்தவர்கள். இளமையிலேயே உலக அனுபவம் பெற்றவர்களாக இருப்பார்கள். கொள்கையை விட்டுக் காரியத்தை சாதிக்க மாட்டார்கள். சதயம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் எடுத்த பணியை வெற்றிகரமாக முடிக்காமல் உறங்க மாட்டார்கள். பொறுப்பான காரியங்களைச் சாதித்து முடிப்பார்கள். இரக்க குணமுடையவர்களாக இருப்பார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேலோர் போற்றத்தக்க அறிவாளிகளாக விளங்குவார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டால் மன்னிக்கக் கூடிய மாண்புடையவர்கள். கண்ணியமானவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு: வேதை(ஆகாதது)-உத்திரம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனகபுஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்- வெண்மஞ்சள். அதிஷ்ட எண்-7. பூரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் இரக்க குணமுடையவர்கள். நினைத்த மாத்திரத்தில் எக்காரியத்தையும் உரியவர்களைக் கொண்டு செய்து முடிக்கக்கூடிய ஆற்றலும் சாமர்த்தியமும் உடையவர்கள். பூரட்டாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த வாழ்க்கையை விரும்புவதோடு அதற்காக வேண்டிய அளவும் பாடுபடும் இயல்பும் உடையவர்களாக இருப்பார்கள். உள்ளத் தூய்மையும் புத்திசாலித்தனமும் கொண்ட இவர்கள், அதையும் கற்றுத்தேறும் ஆற்றல் படைத்தவர்கள். பூரட்டாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பதவி வகிக்கக் கூடிய அளவிற்கு திறமை உண்டு. கடமை உணர்ச்சிமிக்க இவர்கள் கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்வார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 11ல் இருந்து வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 12ம் வீட்டுக்கு மாறுவதால் பொறுமை, நிதானம் ஆகிய இரண்டையும் கடைபிடித்தால் வாழ்க்கை žராக செல்லும். பொருளாதாரத்தில், சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்ற நிலை இருப்பதால், அதிக செலவுகளை இழுத்து விட்டுக்கொள்ள வேண்டாம். பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை இருப்பதால் அளவான முதலீடு நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரையும் குற்றம் சாட்டிப் பேச வேண்டாம். இயன்ற வரை இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்து விடுங்கள். மூன்றாம் நபரின் தலையீடு இல்லாமலிருந்தால், குடும்பத்தில் குழப்பம் இராது. சின்ன, சின்ன விஷயங்களிலும் நேரடியான கவனம் செலுத்தி வந்தால், முழு லாபமும் முறையாக உங்களை வந்து சேரும். உல்லாசம், கேளிக்கை ஆகியவற்றில் ஈடுபடுவதைக் குறைத்துக்கொண்டால், பாதி பிரச்சினைகள் தானாகவே குறைந்து விடும். வெளிநாடுகளில் பணிக்கு செல்ல விரும்புபவர்கள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களையும், நம்பிக்கைக்குரிய நபர்களையும் அணுகுவது நல்லது. கவனக் குறைவிற்கு இடம் கொடாமல், உங்கள் பணியில் விழிப்பாய் இருப்பது அவசியம்.

பெண்களுக்கு: கடன் பட்டாவது சுப நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் சூழல் இருக்கும். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் உங்கள் கடமையை முடித்துவிடுங்கள். தகுந்த நேரத்தில் நல்லவை உங்கள் இடம் தேடி வரும். சில நேரங்களில் சின்ன சின்ன ஆரோக்கிய நலிவுகள் தலை காட்டும். தேவையான செலவுகளை மட்டும் செய்து வந்தால், வரவுக்குள் உங்கள் தேவைகள் அடங்கி விடும். உறவுகளிடம் சூழலுக்கேற்றவாறு பக்குவமாக நடந்துகொள்வது நல்லது.

மாணவர்களுக்கு: அறிமுகம் இல்லாத இடங்களில் படபடவென்று பேசுவதை குறைத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகள் உங்கள் அருகே வராமலிருக்கும். தகுதிக்கு மீறிய நட்புக்கு ஆசைப்படாமலிருப்பது அவசியம். சில சமயங்களில் உங்கள் அழைப்புக்கு உரிய பலனைப் பெற சிலர் தடையாய் இருப்பார்கள். அவர்களைப் புறந்தள்ளிவிட்டு முன்னேறுங்கள். வயது முதிர்ந்தவர்களுடன் எந்த வாக்கு வாதத்திலும் ஈடுபடாமலிருப்பது புத்திசாலித்தனம்.

வியாபாரிகளுக்கு: வியாபார வட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவும். எப்போதும், விழிப்புடன் செயல்படவும். வாடிக்கையாளர்களின் ஆதரவு சிறப்பாக அமைய நல்ல திட்டங்களைத் தீட்டுவதோடு மட்டுமல்லாமல் அதனைத் தகுந்த முறையில் செயல்படுத்துவதும் முக்கியம். தகுந்த ஆலோசனையுடன் புதிய முயற்சியில் ஈடுபட்டால், நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. சரக்கு அனுப்பும், வாகனங்களை தகுந்த விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: எந்த சூழலிலும், கட்டுப்பாடாய் நடந்து கொள்வதை கடைப்பிடித்தால், எல்லோரிடமும் நற்சான்றிதழைப் பெற்றுவிட முடியும். ஞாபக மறதியால், வரும் சிக்கல்களைத் தவிர்க்க, எதையும் உடனுக்குடன் குறித்து வைப்பது அவசியம். அலுவலக வாகனங்களை சொந்த உபயோகத்திற்கு எடுத்து வரும் பழக்கத்தை குறைத்துக்கொள்வது நல்லது. கடன் வாங்கி கொண்டாட்டம் கேளிக்கை ஆகியவற்றைத் தவிர்த்தல் நல்லது. கோபதாபத்தை கட்டுக்குள் வைத்தால், எதிலும் வெற்றி வாய்ப்பு உங்களுக்கே!

கலைஞர்களுக்கு: புதிய இடங்களில் கட்டுப்பாடுடன் நடந்து கொண்டால் எந்த பிரச்சினையிலும் சிக்காமல் தப்பலாம். பத்திரிக்கைச் செய்திகளால் நிம்மதி குறைய வாய்ப்பிருப்பதால், எதிலும் நடுநிலையாக செயல்படுங்கள். எந்த சூழலிலும் தேவையற்ற பரபரப்பிற்கு இடமளிக்காமல் இருந்தால் சிந்தனைகள் சிதறாமலிருக்கும். நீங்கள் பங்கேற்கும் விழா, விருந்துகளில் நாவிற்கு அதிக சுதந்திரம் அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணப்புழக்கத்தில் விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம்.

விவசாயிகளுக்கு: பயிர் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து, அதற்கேற்றவாறு மாறுதல்களை செய்தால், நல்ல பயனை அடைய இயலும். கணிசமான லாபத்தை கையில் தக்க வைத்துக்கொள்ள இடைவிடா உழைப்பும், தளராத முயற்சியும் தேவைப்படும். அறிமுகம் இல்லாதவர்களுக்கு விலையுயர்ந்த விவசாயப் பொருட்களை இரவலாகத் தருவதை தவிர்த்தால் உபகரணங்கள் பாழாகமலிருக்கும். அதிகமாக பயிர்க் கடன் பெறும் முன் அதில் உள்ள சாதக பாதகங்களை கவனத்தில் கொள்வது நல்லது.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: உங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு, எல்லா விஷயங்களிலும் பிறர்க்கு அறிவுரை வழங்குவதை குறைத்துக்கொள்ளுங்கள். உங்கள் சொல்லுக்கு தனி மதிப்பிருக்கும். அதிக பொறுப்புக்களை சுமக்கும் நேரங்களில் ரத்த அழுத்தம் ஆகியவற்றை அவ்வப்பொழுது பரிசோதித்துக் கொள்வது அவசியம். உங்கள் உழைப்பிற்கேற்ற பாரட்டும், வெகுமதியும் கிடைத்தாலும், தலைக்கனமின்றி எளிமையாகப் பழகினால் ஆதரவாளர்கள் அனைவரும் உங்கள் பக்கமே! வேண்டாத பிரச்சினைகளில் தலையிடாமலிருந்தால், வீண் தலைவலியைத் தவிர்த்து விடலாம்.

பரிகாரங்கள்: வேண்டாத துன்பங்கள் யாவும் விலக துர்க்கை சன்னதியில் மனமுருகி வழிபடுங்கள் விடும். நலம் பல வந்து சேர, கூட்டுவிக்க, பிள்ளையாரை பணிந்து வருவது நல்லது. நீங்கள் பக்தியுடன் செய்யும் குல தெய்வ வழிபாடு சுகமான வாழ்வைத் தரும். குருவின் மனத்தை குளிரச் செய்ய அவருக்குப் பிடித்தமான முல்லை மலரால் அர்ச்சனை செய்து வரவும்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “kumbam - guru peyarchi 2011 may”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...