728 X 90 Ad slot
Monday, May 9, 2011
guru peyarchi may 2011 - meenam
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்
மீனம் ராசியின் சிறப்பு: ராசிக்கட்டத்தில் 12வதாக வரும் பெண் ராசியான மீனத்தில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தின் அமைப்பு, மீன்கள் இரண்டு எதிரும், புதிருமாக இருப்பது போல் காணப்படும். மீனத்தை தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள். கம்பீரமாக இருப்பார்கள். இவர்களின் கண்கள் கவர்ச்சியாக இருக்கும். மனதில் கவலைகள் இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். மீனத்துக்குரிய ஆதிக்கக் கிரகம்-குரு. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அதிர்ஷ்டக் கல்-புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-மஞ்சள். அதிர்ஷ்டத் திசை-வட கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3. நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம்-பிரம்மா.
மீனம் ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: பூரட்டாதி 4ம் பாதம். உத்திரட்டாதி 1, 2, 3, 4 பாதங்கள். ரேவதி 1, 2, 3, 4 பாதங்கள். பூரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் தாம் ஈடுபடும் விஷயங்களில் சிறப்புடன் பணியாற்றுவார்கள். மன உறுதி படைத்த இவர்கள் எளிதில் பிறருடன் நட்பு பாராட்டுவார்கள். இவர்கள் பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்குவார்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சனியாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி தெசையே ஆரம்ப தெசையாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த காரியத்திற்கும் பிறர் உதவியை நாடாதவர்கள் சுயநம்பிக்கையுடையவர்கள் என்றும், தன் கையே தனக்குதவியென்ற திட சித்தம் உடையவர்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-பூரம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் பூசம், பரணி, பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-கருங்குவளை. அனுகூல தெய்வம்-சனீஸ்வரன். அதிர்ஷ்டக் கல்-நீலம். அதிர்ஷ்ட நிறம்-கறுப்பு. அதிர்ஷ்ட எண்-2, 6, 8. உத்திரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள். ஆனால், தம்மை உதாžனப்படுத்துபவர்களைக் கண்ணெடுத்தும் பாரார்கள். பிறர் இவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி இவர் சிறிதும் கவலைகொள்ளார். பிடிவாதக் கொள்கை உடையவர்கள். உத்திரட்டாதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் காரியவாதிகள். கொள்கையை விட்டுக் கொடுப்பதுபோல் தளர்த்தி இறுக்கிப்பிடிப்பார்கள். இவர் கடமையுணர்ச்சியிலிருந்தும், பொறுப்பிலிருந்தும், பந்த பாசங்களிலிருந்தும் விடுபடார்கள். உத்திரட்டாதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிறர் உள்ளத்தில் உள்ளதை எளிதில் கிரகிக்கும் சக்தியுடையவர். பிறர் செய்யும் குற்றம் குறைகளை அச்சமின்றி எடுத்துரைப்பர். யாவருக்கும் நன்மையே செய்ய வேண்டுமென்ற கருத்துடையவர்கள். உத்திரட்டாதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அழுத்தந் திருத்தமாகப் பேசுவார்கள். பேச்சில் உறுதி தொனிக்கும். கபடமற்ற உள்ளமும், ஆடம்பரமற்ற தோற்றமும் உடையவர்கள். பிரதிபலன் கருதாது உழைத்திடுவார்கள். ரேவதி நட்சத்திரத்தில் நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை புதன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் புதிய கருத்துகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் ஊக்கமளிப்பார்கள். உறவினர்களிடத்தில் வாஞ்சையுடையவர்கள். இருப்பது சிறிதெனினும் சுயமாகத் தேடி அதைப் பன்படங்காக்கும் வல்லமை உடையவர்கள். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)-மகம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், மூலம், கேட்டை, ரேவதி. (நன்மை செய்யும் நட்சத்திர வரிசையில் உங்களுக்கு அசுவினி மட்டும் வருகிறது. கேதுவின் நட்சத்திரமான மகம், மூலம் வரவில்லை. எனவே வேதையாக வந்தாலும் அசுவினி மட்டும் தான் திருமணம் செய்ய ஏற்றதாக எடுத்துக்கொள்ளலாம்). அதிர்ஷ்ட எண்-9. ரேவதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பணத்தைக் கொண்டும், செல்வாக்கைக் கொண்டும், மற்றவர்கள் சாதிக்க முடியாததை நொடிப்பொழுதில் சாதித்திடுவார்கள். சிக்கல் நிறைந்த வாழ்க்கையெனினும் சிக்கலிலிருந்து இவர் தன்னை விடுவித்துக் கொள்வார்கள். ரேவதி 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் அரிய வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள். ஆத்ம பலமும், மனோதிடமும் உடையவராதலால், பிரபலமான காரியங்களைத் திட சங்கற்பத்துடன் செய்து முடிப்பார்கள். ரேவதி 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் உயர்ந்த பண்பு உடையவர்கள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் மனதை ஒரே நிலையில் கட்டுப்படுத்தக்கூடியவர்கள் அன்பு உடையவர்கள், சாந்தமானவர்கள். ரேவதி 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் அமைதியான தோற்றமுடையவர்கள். தத்துவ ஆராய்ச்சியிலும், விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கருத்துடையவர்கள். தீர ஆலோசித்து எந்தக் காரியத்திலும் ஈடுபடுவார்கள்.
பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 12-ல் இருந்து அலைச்சலையும், செலவுகளையும் வளம் பல தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் உங்கள் ராசிக்கே மாறுவதால், எந்தவொரு விஷயத்தையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் கவனத்துடன் இருந்தால், பணிகள் தொய்வின்றி žரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும். பொருளாதார அளவில் யானைக்கும், பானைக்கும் சரி என்பதுபோல, வரவுக்கும் செலவுக்கும் சரியாய் இருக்கும். உறவுகளை புரிந்துகொண்டால், அவர்களின் ஆதரவும் அனுகூலமும் குறையாமலிருக்கும். உங்களை புகழ்பவர்களை நல்லவர்கள் என்று நம்பி உங்கள் சொந்தப் பிரச்சினைகளை அவர்களிடம் கொட்ட வேண்டாம். கோபதாபங்களை குறைத்துக்கொண்டால், குடும்பத்தில் கூடுதல் மகிழ்ச்சி நிலவும். žரான உணவுப்பழக்க வழக்கம், தேவையான உடற்பயிற்சி- இந்த இரண்டையும் கடைபிடித்து வர, ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளி வட்டாரங்களிலிருந்து வரும் வம்பு, தும்பு ஆகியவற்றில் ஈடுபடாமலிருங்கள். அமைதியாக வேலைகளைச் செய்ய இயலும். பல சம்பந்தமான நோய்களை உடனுக்குடன் கவனித்து வந்தால், எந்த பாதிப்பும் இராது.
பெண்களுக்கு: சில சமயம் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். உறவுகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் எந்த சுணக்கமும் காட்டாமலிருந்தால், அவர்களும் இணக்கமாக நடந்து கொள்ள முன் வருவார்கள். பயணங்களின் போது உங்கள் உடைமைகளை பத்திரமாக வைப்பது நல்லது. வீண் ஜம்பம், படாடோபம் ஆகியவற்றிற்கு தலையாட்டாமல் இருந்தால், மன உளைச்சலிருந்து தப்பிக்க இயலும் கோபத்தையும், வேகத்தையும் தவிர்த்து செயல்பட்டால் அனைத்திலும் வெற்றியே!
மாணவர்களுக்கு: ஆசிரியர்-மாணவர் உறவு அனுகூலமாக இருக்க அடக்கமாக நடப்பது அவசியமாகும். வாகனங்களில் மிதமான வேகத்தில் செல்வது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது. உடனிருப்பவர்களே எரிச்சலூட்டும்படியான காரியங்களில் ஈடுபடலாம். கவனக் குறைவைத் தவிர்த்து செயல்பட்டால், தேர்வுகளை பயமின்றி எழுத இயலும். நண்பர்களிடையே அவ்வப்போது உருவாகும் பூசல்களை மனம் விட்டு பேசித் தீர்த்துக்கொண்டால், நட்பு என்பது பிரியாமலிருக்கும்.
வியாபாரிகளுக்கு: பங்குதாரர்களின் மனப் போக்கை உணர்ந்து செயல்பட்டால், வீண் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். சரக்கு போக்குவரத்தில், கண்மூடித்தனமாக யாரையும் நம்பாமல் விழிப்புடன் இருந்தால், நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் அதிருப்தி ஏற்படாதவாறு உங்கள் செயல்பாட்டை மாற்றி அமைப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு: உங்கள் உரையாடல்களில் இனிமையின் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்கு நல்ல மதிப்பிருக்கும். சக ஊழியர்களால் தொல்லைகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்கள், உங்கள் தலையில் பணியை கட்டி விட்டு, நழுவ இடம் கொடாமலிருப்பது நல்லது. ஏனோதானோவென்று செயல்படும் ஊழியர்களை இதமாகக் கண்டிப்பது நல்ல பலனைத் தரும். சில நேரங்களில் சிறிய தவறுகளுக்காக சில பணிகளை மீண்டும் செய்யும் சூழ்நிலை உருவாகும்.
விவசாயிகளுக்கு: புது நிலம் வாங்கும் முயற்சிகளில் சிறிது தேக்க நிலை காணப்பட்டாலும், கடுமையாக உழைத்தால், நினைத்ததை ஓரளவு சாதிக்க இயலும். நிலப் பராமரிப்பு, நீர்ப்பாசனம் முதலியவற்றில் தோன்றும் சிறு பிரச்சினைகளை வளர விடாமல் இருப்பது புத்திசாலித்தனம். கால்நடைகள் மூலம் பெறும் லாபம் அதிகரிக்க அவற்றை பராமரிப்பது அவசியம். கடன் தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்க சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது நல்லது.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு: பண விஷயங்களில் திட்டம் போட்டு செயல்படுவது நல்லது. சிலரை நம்பி ஒப்படைத்த காரியங்கள் முடியாமல் இழுபறியாய் இருக்கும் சூழல் நிலவும். முடிந்ததாக நினைத்த பிரச்சினையை, விஷமிகள் மீண்டும் கிளறி உங்களை அலைக்கழிக்கக் கூடும். எனவே எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பிறரின் குறைகளைக் கண்டுபிடிப்பதை விட நிறைகளைப் பாராட்டினால், அனைவரும் உங்கள் பின்னால் இருப்பார்கள்.
கலைஞர்களுக்கு: சக கலைஞர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். அது சில முக்கியமான விஷயங்களில் நல்ல பதில் கிடைக்கும் வரை காத்திருப்பது நல்லது. உங்கள் சுறுசுறுப்பு மங்காமல் பார்த்துக்கொண்டால், எடுத்த காரியங்கள் விறு விறுவென்று நடைபெறும். உங்களுக்கு நல்ல யோசனை சொல்பவர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்ளுங்கள். முன்னைக் காட்டிலும் அதிகம் பாடுபடுவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் சற்றே மேலோங்கும்.
பரிகாரங்கள்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வாருங்கள். வாழ்க்கையில் வரும் பலன் நன்மையாய் மாறும். துர்க்கை வழிபாடு ராகுவின் மனத்தை குளிர்விக்கும். சனியின் அருளாசி பெற, அவருக்கு உரிய பாடலை சொல்லி வாருங்கள். சனிக்கிழமை தோறும் அஞ்சனை மைந்தனாம் அனுமனை ஆராதித்து வருபவர்களுக்கு தொழிலில் எந்த சங்கடமும் தோன்றாது.
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “guru peyarchi may 2011 - meenam”
Post a Comment