728 X 90 Ad slot

Tuesday, August 9, 2011

Actor Karthi enter acting in Tollywood Telugu Movie


Actor Karthi enter in Telugu Movie



தெலுங்கில் சொந்தக்குரலில் பேசும் ஒரே தமிழ் நடிகர் கார்த்தி!

'பொம்மரிலு' என்ற தெலுங்குப்படத்தின் மூலம் (சந்தோஷ் சுப்ரமணியம்' என்று தமிழில் வந்தது) பிரபலமடைந்த பாஸ்கர் (இவர் எடிட்டர் மோகனிடம் பயிற்சி பெற்ற தமிழர்) தெலுங்கில் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவிருக்கிறார். கார்த்தி "எனது சிறந்த திருமண பரிசாக இதைக் கருதுகிறேன்" என்று பெருமை பொங்க கூறுகிறார். ஏற்கனவே அவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்'-'யுகம்கி ஒக்கடு' என்றும், 'பையா'-'ஆவாரா' என்றும், 'நான் மகான் அல்ல'-'நா பேரு சிவா' என்றும், டப் செய்து வசூலில் சாதனை புரிந்துள்ளன. அதனால் தெலுங்கிலும் கால் பதிக்கலாம் என்று கார்த்தி முடிவு செய்துவிட்டார்.

இது பற்றி கார்த்திக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். "தெலுங்கில் மூன்று பெரிய இயக்குநர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இன்னும் கதை கேட்கவில்லை. கதை முடிவான பின்பே தெலுங்கில் நடிப்பேன்" என்றவரிடம் "தெலுங்கில் சொந்தக்குரலில் பேசுவீர்களா?" என்று கேட்டதற்கு, " 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக ஹைதராபாத்தில் பல நாட்கள் (100 நாட்கள்) படப்பிடிப்பு நடந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெலுங்கு பேச கற்றுக் கொண்டேன். அந்தப்படம் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்ட போது எனக்கு முழுமையாக தெலுங்கு தெரியாது. எனக்கு பதில் வேறொருவர் குரல் கொடுத்தார். அதற்கு பின் தெலுங்கில் அந்தப் படத்தைப் பார்த்த போது, என் நடிப்பினை வேறொருவர் குரலில் பார்ப்பதற்கு மனம் உடன்படவில்லை.

மம்முட்டி எந்த மொழியில் நடித்திருந்தாலும், அவரது படங்கள் பிறமொழிகளில் டப் செய்யப்பட்டாலும் அவரே குரல் கொடுக்கிறார் என்பதைக் கவனித்தேன்.

'பையா' தெலுங்கில் 'டப்' செய்யப்பட்ட போது நானே கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டு 'டப்பிங்' பேசினேன். படம் பார்த்த போது அது டப் செய்யப்பட்ட படம் போலவே தெரியவில்லை. நேரடி தெலுங்கு படத்தில் நானே நடித்தது போலிருந்தது. அது தெம்பும்,தைரியமும் தர, 'நான் மகன் அல்ல' பட தெலுங்கு டப்பிங்கில் நானே பேசினேன்" என்று தனது தெலுங்கு அனுபவங்களை கூறினார்.


Tuesday, August 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Actor Karthi enter acting in Tollywood Telugu Movie”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...