728 X 90 Ad slot
Friday, June 10, 2011
Kannada Actress Vijayalakshmi pictures pics image jpg
விஜயலட்சுமியை தூண்டிவிட்டது யார்? - ஸ்பெஷல் ரிப்போர்ட்!
விறைப்பேறிய உடல்மொழியும், தமிழ் உணர்வூறிய வாய்மொழியும், சேர தமிழக அரசியற் களத்தில் புதிய அதிர்வினைத் தோற்றுவித்தவர் இயக்குனர் சீமான். சீற்றமுடன் மிடுக்கோடு திரிந்த சீமானை, சற்று அயர்வுறச் செய்திருக்கிறது விஜயலட்சுமி விவகாரம் என்பது மறுப்பபதற்கில்லை.
இதை அவரே செவ்விகளில் வெளிப்பபடுத்தியும் இருக்கிறார். மிகக்கடுமையான அரசியற் தடைச்சட்டங்களின் கீழ், சிறையில் தள்ளப்பட்டபோது மிடுக்கோடு சென்று, மாறாத சிரிப்போடும் வெற்றியோடும் வெளிவந்தவர் சீமான். அவரா இப்படி அயர்ந்து போகின்றார் ? அந்தளவிற்கு விஜயலட்சுமி விவகாரம் முக்கியமானாதா..? என்றால், இல்லை எதிர்பார்த்ததுதான். எதிரிகளால் இவ்வாறான இடையூறுகள் ஏற்படும் என எதிர்பார்த்ததுதான். ஆனாலும் இவ்வவாறான சூழ்நிலைகளுக்கு விளக்கம் சொல்லியே காலம் வீனாகிறது எனக் கவலை கொள்கின்றார் சீமான்.
ஆனால் சீமானின் இந்தக் கவலைக்குக் காரணம் அது மட்டுமல்ல என்கின்ற உண்மை அதுபற்றி சற்று விசாரத்த போது எமக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. கிடைத்த தகவல்களை தொடர்ந்து விசாரித்த போதுததான் இந்தவிவகாரத்தின் சில உள்ளடி வேலைகளும், ஒட்டுறவாடிக் கெடுத்த விவகாரங்களும் எமக்குத் தெரிய வந்தது. எமக்குக் கிடைத்த தகவல்கள் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள போதும், தகவல்களை வழங்கியவர்கள் விரும்பாமையால் அவற்றை உறுதிசெய்யப்பட்ட தகவல்களாக வாசகர்களுக்கத் தரமுடியாமைக்கு வருந்துகின்றோம். ஆனாலும் நெருப்பில்லாமல் புகையாதே என்பதுபோல் புகைச்சலுக்கான தீமூட்டல் அரசியற் களம் என வெளிப்படையாகப் பேசப்பட்ட போதும், அதன் ஒரு சில பொறிகள், சீமான் சார்ந்த சினிமாத்துறைக்குள்ளும் இருந்து பறந்திருப்பதாகத் தெரிய வருகிறது.
தான் சார்ந்த சினிமாத்துறையில் இயக்குனராகச் சாதிக்க வேண்டும் என்ற சராசரியான சினிமா கனவு மிகுந்த இயக்குனராகத்தான் சீமான் இருந்தார். தமிழ் உணர்வு மிகுந்திருந்த சீமானுக்கு விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பும் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ் மக்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும், ஶ்ரீலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தமிழகத்தில் நடத்தப்பட்ட எதிர்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட போது உரையாற்றத் தொடங்கினார் சீமான். அவரது உரையின் வீச்சும், அவற்றில் சொன்ன கருத்துக்களும் பலரையும் கவர்ந்தது. எதிர்பாராதவகையில் அவருக்கு இளைஞர் மத்தியில் எழுந்த அரசியற் செல்வாக்கை முளையிலேயே கிள்ளிவிட விரும்பியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். இதற்காக கறுப்புக் கண்ணாடிகளுப் பின்னிருந்த அவரது கண்ணசைப்பில், சட்டரீதியான முடக்கல்களும், சட்டத்திற்குப் புறம்பான தடங்கல்களும் ஏற்படுத்தப்பட்டன. இவையெல்லாவற்றையும் சீமான் எதிர் கொள்ளத் தொடங்கிய போதும், வெற்றி கொண்ட போதும், சீமானின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.
இவ்வாறு சீமான் என்ற கிராமத்து இளைஞனை அரசியலில் சீறும் ஜல்லிகட்டுக் காளையாக கொம்பு சீவி வளர்த்து விட்டது கலைஞரின் அடிப்பொடிகளினதும், துதிபாடிகளினதும் செயல்கள். இதனால் தமிழக அரசியலில் குறுகிய காலத்துக்குள் முக்கியத்துவம் மிக்கவரானார் சீமான். அவர் மீது நம்பிக்கை வைத்து திரண்ட இளைஞர்களை வைத்து உருவாகியது 'நாம் தமிழ்ர்'. ஆரம்பத்தில் ஆரசியற்கட்சியாக ஆரம்பிக்கப்பட்ட போதும், பின் அரசியற்கட்சியாகப் பரிணாமம் பெற்ற போதும், அரசியலில் நேடியாக அத கலந்து கொள்ளதாதும், தேர்தலில் போட்டியிடதாததும், அரசியலில் ஊறித் திளைத்த பெரியவர்கள் மத்தியில் சிறுபிள்ளை விளையாட்டாகவே தெரிந்தது. அதனால் அவர்கள் சீமான் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் ஒரு தேசியக்ட்சிக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்பதன் பின்னனியில் சீமானினதும், அவரது அமைப்பினதும் பலம் தெரிந்து, பயந்து போனவர்கள் பதுங்கிக் கொள்ளாது குழிபறிக்கத் தொடங்கியதன் தொடக்கமே விஜயலட்சுமி விவகாரம்.
ஆனால் நமக்குத் தெரிந்த வரையில், நாம் தமிழர் இயக்கத்தில் முப்பது வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மட்டும் 2.8 லட்சம் பேர் அதிகாரபூர்வமாக இணைந்திருக்கிறார்களாம் . இவர்கள் தவிர நாற்பது வயத்தைக் கடந்த உறுப்பினர்கள் 1.5 லட்சம் பேர் என்கிறார்கள் . தற்போது இந்த நான்கு லட்சம் உறுப்பினர்கள் மற்றும் சீமான் மீது அபிமானம் கொண்ட தமிழ்மக்கள் மனதில், விஜயலட்சுமி விவகாரம், சீமான் மீது அவநம்பிக்கையின் முதல் கல்லை வீசியிருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்தக் கல் வீசப்படுவது தொடர்பான முதற்கட்டத் தகவல்கள் காவல்துறைக்கு வந்ததும், சீமான; தரப்புக்கு அறியதரப்பபட்ட போது, தாரளாமாக முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளுங்கள். அதனை முறையாக அணுகி வெற்றி கொண்டு என் உண்மைநிலை நீரூபிப் பேன் எனச் சொன்னவரே சீமான்தான்.
தற்போது விஜயலட்சுமிக்கும் தனக்கு நெருக்கமான உறவு எதுவும் இல்லை என்பதை நிரூப்பிக்க வேண்டிய கட்டாயத்துக்கும், மன உளைச்சலுக்கும் தள்ளப்பட்டிருகிறார் சீமான். இந்த விவகாரத்தால் விஜயை ஹீரோவாக வைத்து இயக்க இருந்த பகலவன் படத்துக்கும் தற்காலிகப்பின்னடைவு ஏற்பட்டிருகிறது என்கிறார்கள். உயிருக்கே அஞ்சாத சீமானை இத்தனை புரட்டிபோட்டிருக்கும் இந்த விவகாரத்தின் பின்னனியில் யார் யார் உண்மையாக செயல்பட்டிருகிறார்கள் என்ற தகவல் மிக நம்பகமான வட்டத்தில் இருந்து இப்போது கிடைத்திருகிறது.
தேசிய கட்சியில் அன்மையில் இனைந்து கொண்ட முன்னாள் எம்.எல்.ஏவும், நகைச்சுவை நடிகருமான ஒருவரின் பெயர் முதலில் இந்த விவகாரத்தில் அடிபட்டது. தற்போது அவருடன் தேசியக்கட்சியின் தமிழ்நாடு கமிட்டியின் தலைமை பீடத்தில் இருந்தும், தோல்வியை தழுவிய, தலைக்காரரும் விஜயலட்சுமிக்கு பல வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு, 10 லட்சம் நிதி உதவியும் செய்திருப்பதாக தகவல் நமக்குக் கிடைத்தது. இவர்களது இந்தச் செயற்பாடு ஆச்சரியப்படத் தக்கதல்ல எனினும், அதற்கப் பின்ன கிடைத்த தகவல்கள் தான் அதிர்ச்சியானவையாக உள்ளன.
மேற் சொன்ன பெருங்கைகளுடன், சீமானின் சினிமா உலகம் சார்ந்த சில கைளும் கைகோர்த்திருப்பதாகத் தற்போது தெரிய வருகிறது. மிக முக்கியமாக சீமான் சிறை சென்று மக்களின் மனங்களில் இடம் பிடித்தது முதலே, அதுவரையில் அவருடன் இணைந்திருந்த இரண்டு முன்னனி இயக்குனர்கள் சீமானின் புகழை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாக இருந்து வந்தார்களாம். இவர்கள் இருவரும் விஜயலட்சுமியை தூண்டிவிட்டு எம்.எல்.ஏவாக இருந்த நடிகரிடம் அனுப்பியிருகிறார்கள். அவரோ, தனக்கு எதிராக இருந்த தலைமை பீடத்திடம் விஜயலட்சுமியை நகர்த்தினார் என்கிறார்கள் அழுத்தம் திருத்தமாக உண்மை தெரிந்தவர்கள்..! .
யார் அந்த இரண்டு இருக்குனர்கள்? என்பதைப் பார்க்கு முன் விஜயலட்சுமிக்கு எப்படி சீமானின் அலவலத்தில் பரிச்சயம் ஏற்பட்டது என்று ஆராய்ந்த போது, 'வாழ்த்துக்கள்' படம் வெளிவந்திருந்ந போது விஜயலட்சுமி சீமான் அலுவலகத்துடன் தொடர்பில; இருந்திருக்கிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த சீமானின் நெருங்கிய நண்பர் ஒருவர், பிரபல தொலைகாட்சிக்காக விஜயலட்சுமியை கதாநாயகியாகக் கொண்டு, மெகா சீரியல் தயாரிக்க திட்டமிட்டு அவருக்கு ஒரு லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், சீமானின் அலுவலகத்தையே மெகா சிரியலுக்கான அலுவலகமாகவும் சீமான் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்ததாகவும், இதன் காரணமாக சீமான் அலுவலகத்துக்கு விஜயலட்சுமி வந்து சென்றார் என்கிறார்கள். இப்படி வந்து செல்லும்போது தனது வீட்டில் அசைவ உணவு சமைத்து வந்து சீமான் உதவியாளர்கள் உட்பட அனைவருக்கும் பலமுறை விருந்து படைத்து சந்தோஷப்படுத்துவாராம். அதேபோல கொஞ்சம் அன்பாக பழகும் சீமானின் உதவியாளர்களிடமும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கடனாக ஆட்டையைப் போட்டிருகிறாராம் விஜயலட்சுமி. இதே அறிமுகத்தில் தான் விஜயலட்சுமியின் சகோதரி விடயத்துக்காக சீமானின் உதவியினால் வக்கீல்களின் உதவியை விஜயலட்சுமி பெற்றதாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தக் காலத்தில் சீமானுடன் பழகிய நெருக்கத்தைத்தான் நீட்டிக் கதைவிட்டிருக்காராம் விஜயலட்சுமி.
இப்போது விஜயலட்சுமியை தூண்டிவிட்ட அந்த இரண்டு இயக்குனர்கள் யார் என்பதற்கு வருவோம், கடலூர், விழுப்புரம் மாவட்டத்தின் முந்திரிக்காட்டு வாழ்கையை சினிமாவில் காட்டுகிறேன் பேர்வழி என்று, பிரபல நவீன எழுத்தாளர்களின் கதையை காசு கொடுக்காமல் வாங்கியதாகக் கிசுகிசுக்கப்பட்ட , சக இயக்குனர் ஒருவரை நாயகனாக அறிமுகப்படுத்திய, கேமாராவைத் தொழிலாளாகக் கொண்ட ஒரு இயக்குனர்தான் இந்த டிராமாவின் முக்கிய சூத்திரதாரியாம். இவர் சினிமா மேடைகளில் அடிக்கடி “ என் ஈழத்து உறவுகளின் கண்ணீர் கதையை தமிழ்நாட்டில் சினிமாவாக எடுக்க யாருக்கும் துப்பில்லை” என்று உதார் விட்டு திரிவாராம். ஆனால் இவரும் அதை சினிமாவாக எடுக்க முயன்றதில்லை என்பது தனிக்கதை என்றால், இவரது உதார் பேச்சை நம்பி, ஈழவாழ்கையை நான் தயாரிக்கிறேன் என்று வந்த லன்டன் வாழ் புலம்பெயர் தமிழரை மசாஜ் செய்து முதல் தவனையகாக 25 லட்சத்தை ஆபீஸ் போடுகிறேன் பேர்வழி என்று ஆட்டையை போட்டதாக சொல்லப்படுவது கிளைக் கதை. இந்த இயக்குனர்தான் விஜயலட்சுமிக்கு ரூட்போட்டுக் கொடுத்திருகிறார் என்கிறார்கள்.
சீமானின் வளர்ச்சியின் போது செம காண்டில் இருந்த இவரது நண்பரும், இயக்குனரும், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு தனது பொற்காலத்தை தொலைத்து விட்டு வாழ்கையோடு யுத்தம் செய்து கொண்டிருக்கும் கோபக்கார இயக்குனர் விஜயலட்சுமியின் நீண்ட கால நண்பராம். விஜயலட்சுமி மீது நீங்கள் கயல்விழி என்ற ஆவியை ஏவிவிட்டு அவளுக்கு பில்லி சூனியம் வைத்து விட்டதாக என்னிடம் சொன்னாள் என்று இந்த இயக்குனர் நேரடியாகவே சீமானிடம் சென்று சொன்னாராம். இதில் கோபமுற்ற சீமான், அவள் மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்து வைப்பதுதான் நமக்கு பாதுகாப்பு என்று சொன்னதோடு, விஜலட்சுமி போல மறை கழன்ற ஆட்களை இனி அலுவலகத்துக்குள் விடாதே என்று தனது உதவியாளரைக் கூப்பிட்டுச் சொல்லியிருகிறார் அந்த இயக்குனரின் முன்னிலையில். உடனே இதை தனது கூட்டு இயக்குனருக்கு சொன்ன நாயக இயக்குனர், உடனடியாக விஜயலட்சுமியையும் நேரில் சந்தித்துச் சொல்லி தனது ஆற்றாமையை தணித்திருக் கிறார். இதன்பிறகே ஓளி இயக்குனரின் உதவியோடு முன்னாள் காமெடி எம்.எல்.ஏயை சந்தித்து, பணத்துக்காக விஜயலட்சுமி பகடையாக மாறியதாக அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் விசாரனைக்கு வரும்படி இன்னும் சீமானை காவல் துறை அழைக்காத போதும், வரும் வாரங்களில் அழைக்கப்படலாம் என;கிறார்கள். ஆனால் விசாரணைகளைச் சந்திப்பதற்கு முன் இவ்வாறு ஒன்றாகத் திரிந்தவர்களே, எதிரிபோலச் செயற்பட்டிருப்பதை நினைத்தே அயர்ச்சி அடைந்துள்ளாராம் சீமான். மேலும் நண்பர்களாகப் பழகும்போது, நட்பாகப் பகிர்ந்து கொண்ட விடயங்களைக் கூட, இவர்கள் திரித்துச் சொல்லித் திருப்பம் ஏற்படுத்தி விடுவார்களோ என்று யோசித்தாலும், எல்லாவிதமான துரோகத் தனங்களையும் தூக்கியடித்து தனது உண்மை நிலை வெளிப்படுத்துவதில் உறுதியாக இருக்கின்றாராம்.
சும்மாவா சொன்னார்கள் சினிமாவும், அரசியலம், துரோகங்கள் நிறைந்த உலகம் என்று..?
If you loved this post
This post was written by: deivam P Mohanraj
deivam P Mohanraj is a professional blogger, web designer and front end
web developer. Follow him on Twitter
0 Responses to “Kannada Actress Vijayalakshmi pictures pics image jpg”
Post a Comment