728 X 90 Ad slot

Friday, June 10, 2011

எங்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்:சட்ட சபை கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க.


தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளாமல் தி.மு.க புறக்கணித்தது.

நேற்று முன்தினம் சட்ட சபையில் தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் பங்கேற்று இருந்தனர். அப்போது எதிர்க் கட்சி தலைவர் விஜயகாந்த் தி.மு.க.வை விமர்சித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன் பேச முயன்றார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் சபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது தே.மு.தி.க.-தி.மு.க. உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சட்டசபையை நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் புறக் கணித்தனர்.

இது தொடர்பாக சட்டசபை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுகையில், சபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள். எனவே ஒரே வரிசையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடம் ஒதுக்கும் வரை சபை நடவடிக்கைகளில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

ஆனால் மு.க.ஸ்டாலின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பழைய நிலையிலேயே இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்றும் சபைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.

இதுகுறித்து சட்டசபைக்கு வெளியே எ.வ.வேலு எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு ஆட்சியை பற்றி சொல்வதுதான் ஆளுநர் உரை. அந்த உரையில் எதிர்க்கட்சியான நாங்கள் கருத்து சொல்ல தயாராக இருந்தோம். ஆளுநர் உரையின் தடுமாற்றங்கள், ஏற்கனவே இருந்த திட்டங்கள் ரத்து செய்யப் பட்டதை சுட்டிக் காட்டுவதற்காக ஜனநாயக கடமையாற்ற வந்தோம்.

ஆனால் எங்களுக்கு சொல்ல வாய்ப்புகள் இல்லை. எங்களுக்குரிய இடத்தை ஒதுக்கி தருமாறு சபாநாயகருக்கு கடிதம் கொடுத்தோம். ஒரே வரிசையில் இருக்கைகள் வேண்டும் என்றோம்.
ஆனால் பேரவை தலைவர் இன்று கூட எங்களுக்கு உரிய இடம் ஒதுக்க வில்லை. எனவே நேற்று போல் இன்றும் சபையை புறக்கணித்து உள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.

Friday, June 10, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “எங்களை கேலி, கிண்டல் செய்கிறார்கள்:சட்ட சபை கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க.”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...