728 X 90 Ad slot

Monday, June 20, 2011

avan ivan movie story review l அவன் இவன் - ஹாட் விமர்சனம்





‘சேது’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலா. அதன் பிறகு அவரது ஒவ்வொரு படமும் தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சிய படைப்புகள். கடைசியாக இவர் இயக்கிய ‘நான் கடவுள்’ படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார். அப்படிப்பட்ட பாலாவின் இயக்கத்துக்கு, மாஸ் ஹீரோக்களுக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் தமிழகத்தில் உண்டு.

இயக்கம் பாலா என்று திரையில் எழுத்துக்கள் விரியும்போது, விசிலடித்து கரவொலி எழுப்பும் தனது ரசிகர்களை, முதல்முறையாக முழுமையாக திருப்திப்படுத்த தவறிவிட்டார் பாலா.

இப்படியொரு கதைக்களம் நம்ம மூளைக்கு எட்டாமல் போச்சே! என்று சக இயக்குனர்கள் பொறாமை கொள்ளும்படி புதிய கதைக்களங்களை தேடிபோவதில் பாலாவை அடித்துக் கொள்ள கோடம்பாக்கத்தில் யாருமில்லை. இந்தமுறையும் புதிய கதைக்களம்தான்! திருடுவதை நிறுத்தினால் தெய்வக்குத்தமாகிவிடும் என்று நம்பி, அதையே குழத்தொழிலாக செய்து வாழும் மக்கள் நிறைந்த ஒரு தேனி மாவட்ட கிராமம். எக்காரணம் கொண்டும் குற்றப்பரம்பரை வரலாறுக்குள் நுழைந்து ரசிகர்கள் முதுகில் டின் கட்டிவிடக் கூடாது என்று நினைத்த பாலா, நல்லவேளையாக அந்த வியாக்கியனங்கள் எதற்குள்ளும் புகுந்துவிடவில்லை. ஆனால் கதை சொன்ன விதத்தில் கோட்டை விட்டிருகிறார்.

பாலா எப்போதுமே கதாபாத்திரங்களை முன்னிலைப் படுத்தி கதையை இரண்டாவது இடத்தில் வைக்கும் அசாத்திய துணிச்சல் கொண்டவர். இதனால் சின்ன காதாபாத்திரம் என்றால் கூட, இவர் அளவுக்கு டீடெயில் பண்ண ஆள் இல்லை அல்லது யாரும் விரும்புவதில்லை. பாலாவின் ஆகச்சிறந்த பலமே இந்த ‘கேரக்டரேஷேசன் டீடெயிலிங்’தான்.

மலைகளும், மரங்களும், பசுமையும் போர்த்திக்கிடக்கும் மேற்படி கிராமத்தில்தான் அவன் இவன் படத்தின் கதையின் மூன்று நாயகர்கள் வாழ்கிறார்கள். முதலாமவர் வால்டர் காதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கும் விஷால். நாடகக்கலைஞரான இவருக்கு பிறவியிலேயே மாறுகண். இரண்டாவது நாயகன் ‘கும்புடுறேன் சாமி’. இந்தக் காதாபாத்திரத்தில் கொச்சையான, அழுக்கான வார்த்தைகளால் ரசிகனின் காது கிழிகிற அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்கும் சில்லறைத் திருடன் ஆர்யா. இவர் விஷாலின் தம்பி. தம்பியென்றால் விஷால் அம்மாவின் சக்களத்தி மகன்.( புதிய தலைமுறைக்கு சக்களத்தி மகன் என்றால் புரியுமா தெரியவில்லை?) மூன்றாவது நாயகன், குடி, குழந்தைத்தனம், கருணை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைந்த, மனிதம் நிறைந்த ‘ஹைனஸ்’ என்ற அறுபது வயது ஜமீன்தாராக வரும் ஜீ.எம்.குமார்.

இந்த மூன்று காதாபாத்திரங்களுக்கும் இடையில் நேரடி ரத்த சம்பந்தம் என்றால் விஷால் ஆர்யா இருவருக்கும் இடையில் மட்டும்தான். ஆனால் எந்த ரத்த சம்பந்தமும் இல்லாத அந்த ஊரின் ஹைனெஸுக்கும் இவர்களுக்கும் இடையில், நண்பனைப் போன்ற ஒரு அப்பாவுக்கும் மகன்களுக்குமான ஒரு உலகத்தை தனது படைப்பாளுமை வழியாக விரித்து காட்டுகிறார். அதில் வெற்றியும் பெருகிறார் பாலா. இதற்கு முதல்பாதி நெடுக நகைச்சுவை வசனத்தெறிப்புகளின் துணையை நாடியிருக்கும் பாலா, இரண்டாவது பாதியில்தான் கதையிலேயே கை வைக்கிறார். இது திரைக்கதையில் பாலாவின் பலகீனத்தைக் காட்டுகிறதே தவிர ஆளுமையை அல்ல.

பொதுவாக சோதனை முயற்சி என்று சொல்லப்படும் மாற்று வகை சினிமாக்களில் கூட, முக்கிய கதைச் சரடின் அடையாளங்களை அல்லது பிரச்சனையின் தொடக்கத்தை படம் தொடங்கிய 30 நிமிடத்துக்குள் ரசிகனின் மண்டையில் திணித்து விடுவார்கள். ஆனால் பாலா இந்த விஷயத்தில் ஓவன் காண்பிடண்டாக இருந்து, ரசிகர்களின் பொறுமையை சோதித்து விட்டதுதான் அவன் இவன் படத்தின் மிகப்பெரிய பலகீனம்.
முதல் பாதி முழுக்க, முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் தினசரி வாழ்க்கைப் பாட்டை காட்டுவதிலேயே லயித்தவர், கதையின் முக்கிய கதாபாத்திரங்களுக்கான சில்லறைச் சிக்கல்களை காட்டி அதை தீர்ப்பதிலேயே காட்சிகளையும், நேரத்தையும் செலவிட்டு விடுகிறார். இரண்டாவது பாதியில்தான் முக்கிய கதாபாத்திரம் ஒன்று தேடிபோய் சிக்கிக்கொள்ளும் பிரச்சனையை நோக்கிய நகர்வும், அந்தப் பிரச்சனையில் இந்த மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் இறுதி நிலையையும் மிகக்குறைவான நேரத்தில் சித்தரித்திருக்கிறார். இப்போதான்பா கதையே சூடு பிடிக்குது என்று நிமிர்ந்து உட்காரும் ரசிகனிடம் படம் முடிந்தது போய் வா என்கிறார். இதனால் மரபார்ந்த சினிமா பார்வையாளனுக்கு இது புதிய கதை சொல்லும் முறை என்று விவாதித்தாலும் கூட, ஒட்டுமொத்தமாக அவனை வசீகரிக்க தவறி விடுகிறது படம்.

ஒட்டுமொத்தமாக படத்தில் மிஞ்சியிருப்பது வால்டர் கதாபாத்திரத்துக்கு விஷால் எடுத்துக்கொண்டிருக்கும் கடும் உழைப்பும், பாத்திரப்படைப்பின் தேவை கருதி வெற்றுடம்புடன் நடித்திருக்கும் ஜி.எம்.குமாரும் மொத்த படத்துக்கும் மகத்தான பங்களிப்பை செய்திருகிறார்கள்.
முக்கியமாக தனது பிரதான கதாபாத்திரங்களை டீடெயில் செய்வதில் பாலா காட்டும் நேர்த்தியை, வால்டர், ஹைனெஸ் ஆகிய இரண்டுபேரிடமும் பார்க்கமுடிக்கிறது. தம்பி திறமையான திருடனாக இருக்கிறான். வால்டரோ திறமையான நாடகக் கலைஞன். ஆனால் திருட்டுத் தொழிலில் தம்பி சம்பாதிக்கிறான். வால்டர் அதில் தோற்றுப் போகிறான்.

ஒரு கட்டத்தில் அம்மாவின் இம்சைக்கு பயந்து திருடபோகும் விஷால் அப்போது கூட ஒரு கலைஞனாக பெண் வேடமிட்டு செல்வதும், அப்பாவை இழந்த சிறுமியிடமிருந்து திருடக் கூடாது என்று எத்திக் பார்ப்பதும் என்று வால்டர் பாத்திரத்தை நுனுக்கி நுனுக்கி நுட்பமாக செய்திருகிறார். ஒரு கட்டத்தில் சினிமா நாயகன் சூர்யா பங்குக்கொள்ளும் விழாவில் மேடையில் நவரச நடிப்பையும் நிகழ்த்திக் காட்டும் வால்டர் விஷால்… கையை நிலத்தில் ஊணி ரவுண்ட் டிராலி ஷாட்டில் வில்லன் ஆட்களை பந்தாடும் மாஸ் ஹீரோ விஷால்தானே என்ற சந்தேகத்தை உண்டு பண்ணி விடுகிறார். இவையெல்லாவற்றையும் விட, மாறு கண் கொண்டவானாக இருந்தால் என்ன…! அவன் கலைஞன் என்றால் அந்தக் கண்களை வைத்துக்கொண்டே அவனால் நவரசரங்களையும் வெளிபடுத்த முடியும் என்று யாதார்த்தம் நம்பும் பாலாவை ஒரு ஆளுமையான இயக்குனராக இந்தக் காட்சியில் பார்க்கமுடிகிறது. இதே காட்சியில் சூர்யாவை பாராட்டுகிறாரா அல்லது இப்படி விளம்பரம் தேடிக்கொள்ளாதே என்று கூப்பிட்டு வைத்து திட்டுகிறாரா என்பது தேர்ந்த ரசிகனுக்கு நன்றாகவே விளங்கும்.

அடுத்து ஹைனெஸ் தீர்த்தபதி ஜமீனாக ஒரு பழைய அரண்மனை, ஒரு இம்பாலா கார் தவிர வேறு எதுவுமில்லாத ஆனால் வெள்ளை மனதோடு வாழ்ந்திருக்கும் ஜி.எம்.குமார் அந்த பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி விடுவதிலேயே அவரது காதாபாத்திரத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விடுகிறது. அவரது ஆகசிறந்த நடிப்பை வெற்றுடம்புக் காட்சியிலும், பிணமாக நடித்திருக்கும் கணங்களிலும் பார்க்க முடியும்.

படத்தின் பொழுதுபோக்குத் தன்மையை தூக்கிபிடிக்கும் நோக்கத்தோடு கு.சாமியை பயன்படுத்திக்கொண்டிருக்கும் பாலா, ஆர்யாவின் அதீதமான நடிப்பை பல காட்சிகளில் கட்டுப்படுத்த தவறி விட்டாரோ என்று தோன்றுகிறது. துணைக்கதாபாத்திரங்களில் ஆர்யாவின் நண்பன் பேத்தையாக நடித்திருக்கும் மாஸ்டர் விக்னேஷ், எஸ்.ஐ.யாக நடித்திருக்கும் காமராஜ் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள்.

அவன் இவன் திரைக்கதையின் மிகப்பெரிய ஃப்ளா எங்கே ஒளிந்திருகிறது என்றால் படத்தின் பிரதான எதிர்மறை கதாபாத்திரமான அடிமாட்டு மொத்தவியாபாரி ஆர்.கேவை சித்தரிப்பதில் பல்ளிக்கிறது. ஆர்.கே.வின் தோற்றத்தை மட்டும் காட்டி மிரட்டும் பாலா, அவன் செய்யும் தொழிலின் குரூரத்தையோ, அல்லது அவனது அடிமாட்டுத்தனத்தையோ ஒன்றிரண்டு காட்சிகளில் ரசிகனுக்கு உஷ்னம் ஏற்றுகிற ரேஞ்சுக்கு காட்டியிருக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் அவசியம் இல்லாதது போல ஒரு அழுக்கான மாயவி போல அவனை சித்தரிப்பதில் அந்த கதாபாத்திரம் மீதான எந்த அதிர்ச்சியும் ரசிகனுக்குள் கடந்து செல்லாமல் அடம்பிடிக்கிறது.



இதனால் ஹைனஸ் காதாபாத்திரத்தின் முடிவை சகிக்க மாட்டாத வால்டர், கு.சாமி இருவரும் கொதித்தெழுவது பாலாவின் பிதாமகனை மறுபடியும் நினைவுபடுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக க்ளைமாக்ஸில் அவர் தரும் திருப்பம் அதிர்ச்சி அளிக்கவில்லை. மொத்தத்தில் க்ளைமாக்ஸை முதலில் யோசித்து விட்டு பிறகு அதற்கான திரைக்கதையை யோசிப்பதால் வரும் ஆபத்து அவன் இவனுக்கு நேர்ந்து விட்டது. மற்றபடி. பாலா படத்தை திரும்பத் திரும்ப பார்க்கும் ரிப்பீட் ஆடியன்ஸை முதல்முறையாக இழந்திருகிறார் பாலா. அவன் இவனை ஒருமுறை பார்க்கும் ரசிகர்களுக்கு, பாலாவின் பிதாமகன் டிவிடியை இலவசமாகக் கொடுத்து அவர்களை அறுதல் படுத்தலாம்.

-----------------------------------------------------

Film: 'Avan Ivan'; Cast: Aarya, Vishal, Madhu Shalini, Janani Iyer, G.M. Kumar, RK, Ambica; Director: Bala; Producer: Kalpathi S. Agoram, Kalpathi S. Ganesh, Kalpathi S. Suresh; Music Composer: Yuvan Shankar Raja; Rating: ** 1/2

Has Bala's 'Avan Ivan' lived up to its expectations? The answer is yes and no.

'Avan Ivan' has stunning performance by Vishal and an interesting portrayal of the lives of professional thieves. The movie has the potential to be an awesome experience, thanks to director Bala's choice of the plot and the performances but Bala, the scriptwriter, let us down with a screenplay that is inconsistent and predictable.

Tamil Review: 'Avan Ivan'-interesting but fails

Bala's films are known for their harsh realistic portrayal and "Avan Ivan" is no exception. He introduces some not-so-familiar living conditions on screen. The protagonist is introduced in dance sequence in which he dances in the disguise of a woman. Bala continues to surprise us by showing a small village near Theni district in Tamil Nadu, full of thieves and an erstwhile zamindar who supports them.

The movie deals with the relationship between two step-brothers Walter (Vishal) and Kumbudren Saamy (Arya). The two have different traits and always try to outsmart each other. But deep down the heart they are fond of each other. Their mothers (Ambica and Jayaprabha), however, are always at loggerheads.

Highness (G.M. Kumar), the erstwhile zamindar, shares a special bond with these people and patronises them with his wealth and clout. In turn, the boys are quite loyal to Highness.

Walter and Saamy fall in love with police constable Baby (Janani Iyer) and college student Thenmozhi (Madhu Shalini) respectively. The girls too develop soft corner for the boys.

It is a routine that the people of the village (especially Walter and Saamy) get into trouble and are then rescued by Highness. The two come forward to do anything for their Highness when he gets into trouble.

The movie moves on with some hilarious scenes involving the thieves, the fight between the two mothers, the funny ways of police, and the strange lifestyle of Highness. Though some of the scenes are enjoyable, the movie fails to sustain the momentum as the story doesn't move forward. It looks like a redundant affair after a point and hence we get bored.

The turning point comes after a long time in the form of a cattle smuggler (RK), but it is too late and too weak. The crisis brewing over the smuggling incident and the resultant murders are quite predictable.

The emotional scenes involving Highness' death and the revenge fail to make any impactas they fail to rise above the expected lines.

Bala's intention to give a film with some lighter treatment is appreciable, but scenes look like a compilation of stray incidents that lack credibility or coherence.

The predicament of Walter, who is below par in his chosen profession (theft) and artiste at heart, has been well portrayed. Vishal has given life to this character by his stunning performance. He has dared to come out of his action hero image to proved that he is a fine performer too.

His portrayal of Navarasas (nine types of emotions) is noteworthy.

Arya's role might pale in comparison with that of vishal's but he has done well in portraying a man with confidence and sense of humour. He also proves his worth as an actor in some scenes.

G.M. Kumar as Zameendhar is quite impressive. His suffering (without any cloth on his body) in the hands of the smuggler is shocking.

Ambika has rendered a powerful performance while the leading ladies Janani Iyer and Madhu Shalini fail to impress in poorly etched characters.

Surya's cameo as himself is interesting.

Yuvan Shankar Raja's background score is effective while his songs do not make much impact. Arthur Wilson's cinematography deserves special mention. S. Ramakrishnan's dialogues are humourous and realistic.

Overall 'Avan Ivan' suffers from a sloppy script despite having some fine performances. The lack of balance between Bala's emphatic portrayal of different kind of life and his effort to provide fun is the major problem of the movie. The fun becomes farce and the seriousness turns out to be ineffective.

Monday, June 20, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “avan ivan movie story review l அவன் இவன் - ஹாட் விமர்சனம்”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...