728 X 90 Ad slot

Monday, July 25, 2011

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கியது பிரதமருக்கும் தெரியும் : நீதிமன்றில் ஆ.ராசா

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டது பிரதமருக்கும், நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் தெரியும் என ஆ.ராசா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்வது தொடர்பான வாதம் சிபிஐ நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கைதாகி தீஹார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் அ.ராசா இன்று தனக்காக தானே வாதாடினார்.

2ஜி ஸ்பெக்ரம் அலைக்கற்றையை ஏலம் விட கூடாது என்ற முடிவு தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் எடுக்கப்பட்ட முடிவு. அதை தான் நான் பின்பற்றினேன். நான் பின் பற்றியது தவறெனில், 1993ம் ஆண்டிலிருந்து அனைத்து தொலைத்தொடர்பு அமைச்சர்களும் பின்பற்றியதும் தவறு தான். , முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர்களாக இருந்த போது அருன் சௌரி 26 லைசென்களும், தயாநிதி மாறன் 25 லைசென்களும், நான் 122 லைசென்களும் வழங்கியுள்ளேன். எண்ணிக்கை முக்கியமல்ல. ஸ்பெக்ரத்தை யாரும் ஏலத்தில் விடவில்லை என்பதையே இது சுட்டிநிற்கிறது.

அலைக்கற்றை பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதன் மூலமே அன்னிய முதலீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இதையடுத்தே பங்குகள், ஸ்வான் டெலிகாம் மற்றும் யுனிடெக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டன. இது பிரதமருக்கும் தெரியும். இவ்வாறு ஆ.ராசா தனது விவாதங்களை முன்வைத்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது எனில், அதற்கு பிரதமர், மற்றும் ப.சிதம்பரமும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கருத்துப்பட ஆ.ராசா சொல்லியிருப்பதில், சி.பி.ஐயின் விசாரணை வட்டத்துக்குள் காங்கிஸாரும் வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

Monday, July 25, 2011 by deivam P Mohanraj · 1

1 Responses to “வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கியது பிரதமருக்கும் தெரியும் : நீதிமன்றில் ஆ.ராசா”

Dinesh said...
July 25, 2011 at 10:38 PM

Mani Shankar Aiyar Exposes Congress. CBI Exposes Ramdev's aide Balkrishna with fake College degree. A Raja Exposes PM's fake Certificate of HONESTY and INTEGRITY issued by Corrupt Congress Politicians, but still misguiding the Country on Telecom Policies and Cover-ups the share of LOOT from Rs 1.76 lakhs scam by CONGRESS & DMK. When would CBI Expose the fake Election Results of PC? Kalmadi too wanted to expose CWG LOOT but was never taken seriously and recorded. Kalmadi and A RAJA must be protected in TIHAR, Medically and Criminally? and does not ends up like Abdul Karim Telgi. Is it true Sonia Gandhi received Rs 30,000 crore from the LOOT? Lokayakta Exposes Yeddy as Mining Mafia. If Hegde's phone was not taped by Yedurappa to Spy LOKAYUKTA's report then was it taped by PC/Sibal to Spy JAN LOKPAL info? Come on every Cheaters and Looters of India, TIHAR wel-comes you.


Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...