728 X 90 Ad slot

Monday, May 9, 2011

guru peyarchi rasi palan simmam 2011

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

சிம்ம ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் 5வதாக வரும் இந்த ஆண்ராசியின் உருவம் சிம்மத்தைப் போன்று இருக்கும். சிம்மத்தை தன் ராசியாகவும் லக்னமாகவும் கொண்டவர்கள் பெருந்தன்மை உடையவர்களாகவும், வட்டமான முகத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவருக்கும் அடிபணிய மாட்டார்கள். சிம்மத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-சூரியன், அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அதிர்ஷ்டக் கல்-மாணிக்கம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட திசை-கிழக்கு, அதிர்ஷ்ட எண்-1. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-சிவபெருமான்.

சிம்ம ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மகம் 1,2 3,4 பூரம் 1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ம்பாதம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி கேது ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை கேது ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுநல நோக்கில் செயல்படுவார்கள். அதிக அளவில் பணம் செலவழிக்கும் சுபாவமுள்ளவர்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை (ஆகாதது)- ரேவதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் அசுவினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி. அதிர்ஷ்ட மலர்-செவ்வல்லி, அனுகூல தெய்வம்-இந்திரன், அதிர்ஷ்டக் கல்-வைடூரியம், அதிர்ஷ்ட நிறம்-கரும் பச்சை. அதிர்ஷ்ட எண்-10. மகம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுற்றுப்பயணம் செய்ய ஆர்வம் உள்ளவர்கள். உறக்கம் அதிகம் கொள்ளாதவர்கள். தேவைக்கு மேல் அதிகமாக பணம் செலவு செய்யும் இயல்பு உடையவர்கள். எளிதில் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் நற்பண்புகள் நிறைந்தவர்களாய் காணப்படுவார்கள். இவர்களுடைய தலை மற்றும் முகம் பகுதியில் சில தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். வியாபாரத்துறையில் சிறந்து விளங்குவார்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பலருக்கு உதவி செய்யும் குணம் உண்டு. நியாயமாக நடந்து கொள்வார்கள். ஆனால் வம்பு சண்டை என்று வந்து விட்டால் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கு கழுத்து வலி இருக்கும். நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்வார்கள். இவர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடத் தயங்குவார்கள். பெண்கள் மற்றும் பெரியோர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சுக்ரன் ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரம்ப தெசை சுக்ரன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் இனிமையாகப் பேசுவார்கள். சிவந்த உடலை உடையவர்களாக இருப்பார்கள். பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- பூராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 5. அவைகள் பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திராட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-சிவபெருமான், அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-வெண் நீலம். அதிர்ஷ்ட எண்கள்-2, 11. பூரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பு உடையவர்களாக இருப்பார்கள். கணிதம், விஞ்ஞானம் ஆகியவற்றில் நல்ல மதி நுட்பம் இருக்கும். செல்வாக்கு உடையவராய் இருப்பார்கள். அடிக்கடி சளி, இருமல் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு, செல்வ சேர்க்கை, கலைகளில் தேர்ச்சி, சொத்து சுகம் ஆகிய அனைத்தும் ஏற்படும். பெண் குழந்தைகளால் அதிக நன்மை ஏற்படும் யோகம் உண்டு. இவர்கள் மறதி மற்றும் குழப்பத்தால் சில தொல்லைகளை சந்திப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு இல்லற வாழ்வில் சுப பலன்கள் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவும் அனுசரனையும் இருக்கும். பணவரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பும், லட்சுமி கடாட்சமும் ஏற்படும். வாகன வசதிகள், ஆடம்பர வாழ்க்கை, நல்ல சாப்பாடு ஆகியவை குறைவின்றி கிட்டும். பண விஷயங்களில் கவனமாக இருக்க பிறரின் தூண்டுதல் தேவைப்படும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி சூரியன். அவர்களின் ஆரம்ப தெசை சூரியன் ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வசதியுடன் வாழும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு இருக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- உத்திரட்டாதி நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் கார்த்திகை, புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-செந்தாமரை, அனுகூல தெய்வம்-லக்ஷ்மி, அதிர்ஷ்டக் கல்-வைரம், அதிர்ஷ்ட நிறம்-சிவப்பு, அதிர்ஷ்ட எண்-3, 12. உத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தொழில் மற்றும் ஜ“வன வகையில் நற்பலன்கள் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சொந்த ஊர் விட்டு வெளி ஊரில் தமது வாழ்கையை அமைத்துக் கொள்வார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21.11.2010 அன்று இரவு 10.54 மணி அளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 7-ல் இருந்து அருமையான பலனைத்தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 8-ம் வீட்டுக்கு மாறுவதால், தொழிலில் சில மாற்றங்களையும், ஏமாற்றங்களையும் சந்திக்கும் நிலை உருவாகும். வீட்டிலும், வெளி வட்டாரத்திலும் வார்த்தை அம்புகளை வீசாமல் இருந்தால் நேசமும், பாசமும் மாறாமலிருக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்களை வாங்கும் போதும் விற்கும் போதும், வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் உங்கள் ஆசைக் கனவுகள் விரைவில் நனவாகும். முரண்பாடான கருத்துக்களுக்கு மனதில் இடம் கொடாமலிருந்தால், மன உளைச்சலைத் தவிர்த்துவிடலாம். வெளியூர் பயணங்களில் புதியவர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்ப ஒற்றுமை ஆட்டம் காணாமல் நிலையாய் இருப்பதற்கானத் தீர்வை உடன் கண்டு கொண்டால், பிரச்சினைகளைத் திறம்பட சமாளிக்க முடியும். உங்களுக்கு ஏற்படும் தடைகளை சவாலாக எடுத்துக் கொண்டால், எதிலும் வெற்றி பெறுவது உறுதி. புதிய திட்டங்களில் பரபரப்பைத் தவிர்ப்பது அவசியம்.

பெண்களுக்கு: வீண் செலவுகளைச் சுருக்குவதில் தனி கவனம் செலுத்தி வந்தால், வீட்டு செலவுகளைக் குறைவின்றி செய்ய இயலும். அண்டை வீட்டு மனிதர்களால் சில பிரச்சினைகள் உருவாகலாம். சிறிய விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொண்டால், உற்சாகமாக இல்லப் பணிகளை செய்ய இயலும். கர்ப்பிணிப் பெண்கள் ஜ“ரணக் கோளாறுக்கு இடம் தராதவாறு மிதமான உணவு வகைகளை உண்பது நல்லது. செல்லப் பிராணிகளால் சில தொல்லைகள் உண்டாகும். எந்த சூழலிலும் வாக்குவாதத்தைத் தவிர்த்து பொறுமையைக் கடைபிடித்தால், வரும் நன்மைகள் அதிகமாகும்.

மாணவர்களுக்கு: இரவு நேரம் அதிக தூரம் வாகனங்களில் செல்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது. பதற்றம், மறதி-இரண்டையும் தவிர்த்து விட்டால், படிப்பில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி பெற முடியும். நட்பு, வெளி வட்டாரம் ஆகியவற்றில் ஓர் எல்லைக்கோடு இருப்பது அவசியம். படபடவென்று பேசுவதைக் குறைத்தால், பிறரின் கருத்துக்களை ஊன்றி கவனிக்க இயலும். கேளிக்கைகளில் மனதை அலைபாயவிடாமல், கட்டுப்பாட்டுடன் இருந்தால், அதிக நன்மைகள் உங்கள் பக்கம் இருக்கும். உடனிருக்கும் நண்பர்களால், சிறு தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

வியாபாரிகளுக்கு: அரசு தொடர்பான காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் பங்குதாரர்களிடையே அதிருப்தியும், முணுமுணுப்பும் தோன்றி மறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் குளறுபடிகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சரக்குகளைப் பெறுவதும், விநியோகம் செய்வதும் எளிதாகும். வாடிக்கையாளர்களின் மனதையும், தேவையும் அறிந்த பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றாமலிருந்தால் வருகின்ற லாபம் žராக இருக்கும். சட்ட பிரச்சினைகளில் உங்களின் தனிப்பட்ட கவனம் இருந்தால் நன்மைகளை உரிய காலத்தில் பெற இயலும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: சிறிய உரசல்களைப் பொருட்படுத்தாமல் பெருந்தன்மையாய் நடந்துக் கொண்டால், அனைவரும் உங்கள் பக்கமே! தளவாடங்கள் மற்றும் இரும்புப் பொருட்களைக் கையாளுகையில் அதிக கவனம் தேவை. உங்கள் கௌரவத்தைக் கெடுக்க நினைப்பவர்களை அருகில் அண்ட விடாதீர்கள். பொது இடங்களில் அதிகாரிகளைப் பற்றி விமர்சனங்களில் ஈடுபட வேண்டாம். அடிக்கடி பிரயாணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பிரயாணம் பணிகளில் குறுக்கிடாமல் தகுந்த ஓய்வெடுத்த பின் வேலைகளைத் தொடர்வது நல்லது.

கலைஞர்களுக்கு: தரமறிந்து நண்பர்களைத் தேர்வு செய்யுங்கள். தொல்லை ஏதும் தோன்றாது. ஒவ்வாத பழக்க வழக்கங்களுக்கு தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கை வண்டி žராக ஓடும். வீடு மராமத்து, பராமரிப்பு ஆகியவற்றில் நம்பகமானவர்களின் உதவியை நாடுவது அவசியம். உங்கள் லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள மறைமுக வழிகளுக்கு மாறி விடாதீர்கள். லாபத்தைவிட நஷ்டம்தான் கூடும். வேலை மும்முரத்தில் வேளைக்கு உணவு உண்ணும் பழக்கத்தை கடைபிடிப்பதில் கவனமாய் இருந்தால், ஆரோக்கியம் குறையாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: அரசு அளிக்கும் சலுகைகளைக் குறித்த காலத்தில் பெற்றுக் கொள்வது என்பது சற்று சிரமத்திற்கு இடையே நிறைவேறும். சிக்கனம் செய்ய வேண்டிய நேரத்தில் திடீர் செலவுக்காக அதிக பணம் புரட்ட வேண்டியிருக்கும். தொழில் ரீதியான விஷயங்களில் அக்கறையோடு நடந்துக் கொண்டால் மட்டுமே லாபம் என்பது கையில் தங்கும். நிலத்தின் தன்மைக்கு ஏற்றப் பயிர்களைத் தேர்ந்தெடுப்பது அவசியம். கடனாகப் பெறும் உபகரணங்களைப் பத்திரமாக வைப்பது மூலம் வீண்செலவுகளைத் தவிர்க்க முடியும். மேலும் போட்ட பணத்திற்கு ஏற்ற மகசூலையும் பெற முடியும்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பிறர்க்கு உதவப் போய், அங்கும் இங்கும் அலைய நேரிடும். தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டால், பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். வீண் வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருங்கள். வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும். நேரடியாக அரசாங்கத் தொடர்பு உள்ளவர்களை பகைத்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வது புத்திசாலித்தனம். வெளி வட்டாரத்தில் கவனமாக இருப்பதன் மூலம் எதிர்பாராத சங்கடங்களில் சிக்காமலிருப்பதோடு மன அமைதியும் சிதறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பரிகாரங்கள்: அதிகமான கடன் பிரச்சினையில் தவிப்பவர்கள், செவ்வாய்க் கிழமை தோறும் முருகன் சன்னதியில் தீப விளக்கேற்றி, முருகனுக்குரிய மந்திரங்களைக் கூறி வர கடன் தொல்லைகள் படிப்படியாய் குறையும். பிள்ளைகளின் திருமணம் நல்லபடியாக நடந்தேற வியாழன் தோறும் குருவிற்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து வழிபட்டு வரவும்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “guru peyarchi rasi palan simmam 2011”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...