728 X 90 Ad slot

Monday, May 9, 2011

guru peyarchi mithunam 2011

மிதுனம்
(மிருகžரிடம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை)
குரு மாறும் தேதி - 21.11.2010 மாறும் ராசி - மீனம்

மிதுன ராசியின் சிறப்பு: ராசிக் கட்டத்தில் மூன்றாவதாக வரும் மிதுன ராசி ஆண் ராசியாகும். இந்த ராசியில் காணப்படும் நட்சத்திரங்களின் அமைப்பு கையில் கதை என்னும் ஆயுதத்தைத் தாங்கிய ஆணும், அவனுக்குப் பக்கத்தில் வீணை தாங்கிய பெண்ணும் போன்ற தோற்றம் அளிக்கும். மிதுனத்தைத் தன் ராசியாகவும், லக்னமாகவும் கொண்டவர்கள் சுயநலவாதியாக இருப்பார்கள். மற்றவர்கள் தம்மை புகழும்படியாக சாமர்த்தியமாகப் பேசுவார்கள். உயர்ந்த பருத்த மூக்கு உடையவர்கள். முகத்தில் மரு இருக்கும். நல்ல அறிவும், திறமையும் உடைய இவர்கள் சிறிது அவசர புத்திக்கொண்டவர்களாக இருப்பார்கள். மிதுனத்திற்கு உரிய ஆதிக்கக் கிரகம்-புதன், அதிர்ஷ்ட மலர்-வெண்காந்தள். அதிர்ஷ்டக் கல்-பச்சை. அதிர்ஷ்ட நிறம்-பச்சை. அதிர்ஷ்ட திசை-வடக்கு. அதிர்ஷ்ட எண்-5. நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம்-மகாவிஷ்ணு.

மிதுன ராசியில் உள்ள நட்சத்திரங்கள்: மிருகžரிடம் 3, 4 பாதங்கள். திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள். புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள். மிருக žரிடம் 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கும் குணம் இருக்கும். தன் வாழ்க்கைக்குத் தேவையான வசதி வாய்ப்புக்கள் வரும் வரை உழைக்கத் தயங்க மாட்டார்கள். தெய்வ நம்பிக்கை மிக்கவர்கள். மிருகžரிடம் 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு தயாளக்குணத்தோடு சிறிது முன்னெச்சரிக்கை சுபாவமும் உண்டு. விரோதிகளைத் தன்னுடைய திறமையால் அடிபணிய வைப்பார். நினைத்ததை எப்படியும் முடிக்க முனைவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய அதிபதி ராகு ஆகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய ஆரம்ப தெசை ராகு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முரட்டு சுபாவமுள்ளவர்கள். இவர்களின் மூக்கு எடுப்பாக இருக்கும். திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- திருவோணம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம், ரோகிணி. அனுகூல தெய்வம்-பத்திரகாளி. அதிர்ஷ்ட கல்-கோமேதகம். அதிர்ஷ்ட நிறம்-கருமை கலந்த மஞ்சள். அதிர்ஷ்ட எண்-6. திருவாதிரை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கண்கள் அழகாக இருக்கும். உடல் புஷ்டி குறைவாக இருந்தாலும் தன் மனோபலத்தால் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் குணம் உண்டு. இவர்கள் சட்டத்துறையில் நிபுணராக இருப்பார்கள். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடக்கும் குணமுடையவர்கள். வாத சம்பந்த நோய்கள் இவருக்குத் தொல்லை தரக்கூடும். இவர்கள் கணிதத்தில் வல்லவராகவும், எழுதும் திறனும் கொண்டவர்களாய் இருப்பார்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு எதையும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் சற்று குறைவாக இருந்தாலும், தன் கடும் உழைப்பால் அனைத்தையும் žர் செய்து விடுவார்கள். பண விஷயத்தில் கண்டிப்புடன் இருப்பார்கள் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள். எதற்கெடுத்தாலும வாக்குவாதம் செய்யும் குணம் உண்டு. ஜாதகர் சுய முயற்சியுடன் செயல்பட்டு சாதனைகள் செய்வதில் வல்லவராக இருப்பார்கள். உடன்பிறப்புகளால் ஜாதகருக்கு அனுகூலமுண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் அதிபதி குரு ஆகும். இவர்களின் ஆரம்ப தெசை குரு ஆகும். பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் தேர்ச்சியும், நல்ல நிர்வாகத் திறமையும் பெற்றிருப்பார்கள். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு வேதை(ஆகாதது)- உத்திராடம் நட்சத்திரம். திருமணம் செய்ய, தொழில் கூட்டு சேர்க்கவும் பொருந்தாத நட்சத்திரங்கள் 6. அவைகள் புனர்பூசம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், விசாகம், பூரட்டாதி. அதிர்ஷ்ட மலர்-முல்லை. அனுகூல தெய்வம்-பிரம்மா. அதிர்ஷ்டக் கல்-கனக புஷ்பராகம். அதிர்ஷ்ட நிறம்-வெண் மஞ்சள். அதிர்ஷ்ட எண்-7. புனர்பூசம் 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் உத்தியோக வகையில் சாதனை புரிவார்கள். நண்பர்களால் சிலசமயம் நஷ்டங்கள் ஏற்படும். ஜாதகர் எந்த சூழலிலும் துடிப்புடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பதுடன் நல்ல பெயரும் பெறுவார்கள். புனர்பூசம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் சாஸ்திரம் சம்பிரதாயம் ஆகியவற்றைக் கடைபிடிப்பதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். தங்கள் திறமை வெளிப்படும் அளவிற்கு சூழலை உருவாக்கிக் கொள்ளும் திறன் படைத்தவர்கள். புனர்பூசம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி உடையவர்களாகவும், ஆன்மீகத்தில் நாட்டம் உடையவர்களாகவும் இருப்பார்கள். பிறருக்கு தன்னால் இயன்றவரை உதவி செய்யும் குணம் உடையவர்களாக இருப்பார்கள்.

பொதுப்பலன்கள்: இந்த ஆண்டு குரு பகவான் 21-11-2010 அன்று இரவு 10.54 மணியளவில் மீன ராசிக்கு மாறுகிறார். இதுவரை உங்கள் ராசியிலிருந்து 9ம் இடத்தில் இருந்துகொண்டு பல சிறப்பான பலன்களை தந்த குரு பகவான் 21.11.2010 முதல் உங்களின் ராசியிலிருந்து 10ம் இடத்துக்கு மாறுகிறார். தேவையில்லாத அலைச்சல்கள், வீண் முயற்சிகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய வகையில் கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகளால் அவ்வப்போது இடையூறுகளும், கொடுக்கல்-வாங்கல் வகையில் சங்கடங்களும் வரவேண்டிய வாய்ப்புக்கள் வந்து சேருவதில் காலதாமதமும் உண்டாகும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவினங்கள் ஏற்படும். வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். எந்தக் காரியத்திலும் இயல்பான மனநிலையோடு செயல்பட முடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. புதிய உத்தியோக சம்பந்தமான முயற்சிகளில் நிதானம் தேவை. சிறிய காரியங்களில் கூட பெரிய அலைச்சலை ஏற்படுத்தும். ஒரு சிலர் வீட்டைப் பிரிந்து வெளியூரில் வசிக்கும் நிலையும் ஏற்படும். சகல காரியங்களிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது அவசியம். முக்கியமாக மற்றவர்களுக்கு ஜாமீன் போடுவதைத் தவிர்க்கவும். முக்கியமான விஷயங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்படுவதைத் தவிர்ப்பது நல்லது. மனம் நிம்மதி பெற, இறையருளை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.

பெண்களுக்கு: குடும்ப அமைதிக்காக நீங்கள் அதிக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். பெண்கள் உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். புதிய வீடு மாற்றமோ அல்லது கட்டுவதற்கோ, சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால் சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றில் சிக்காமல் நிம்மதியாய் காலம் செல்லும். எப்பொழுதும் பொறுமை என்னும் தாரக மந்திரத்தை கடைபிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு: கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மிகவும் கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம் நல்லது. தீய நண்பர்களுடன் சேர்க்கையை விலக்கிக் கொள்வதன் மூலம் அவப்பெயர் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மாணவர்கள் ஏமாற்றங்களைக் கண்டு சலிப்படையாமல், உங்கள் முழு சக்தியையும் உழைப்பில் போட்டால், வெற்றி உங்கள் வாசல் தேடி வரும். பொது இடங்களில் அடக்கத்துடன் நடந்துக் கொள்வது நல்லது. பகுதி நேரப் படிப்பில் உள்ளவர்கள் சில கெடுபிடிகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும். எனவே தேவையான அனுமதியைப் பெற்று செயல்படுவது புத்தசாலித்தனம்.

வியாபாரிகளுக்கு: வியாபார வகையில் சில தடங்கல்கள் ஏற்படக்கூடும். கொடுக்கல்-வாங்கல் வகையில் திருப்திகரமான சூழ்நிலை நிலவ பணப்பரிமாற்றம் சம்பந்தமான ஆவணங்களையும், ரžதுகளையும் பத்திரமாக வைக்கவும். வெளியூர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது கவனத்துடன் செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம். கூட்டுத் தொழில்களில் கூட்டாளிகளுடன் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லாதவாறு குழுவாக ஆலோசனை செய்து செயல்படுதல் நல்லது. பேச்சு வார்த்தைகளில் கடுமை கலவாமல் இருந்தால், ஒப்பந்தங்கள் கை நழுவாமல் இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலை பளு அதிகரிக்கும். சகஊழியர்களுடன் அவ்வப்போது சிறுசிறு மனக்கசப்புகள் ஏற்படும். அலுவலக ரகசியங்களை ரகசியமாகவே வைப்பது அவசியம். தவறுகள் நேராதவாறு கவனமாய் செயலாற்றுங்கள். உங்களுடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை அடுத்தவர் தட்டிக்கொள்ள இடம் கொடுக்காமல் இருந்தால் நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொண்டுவிடலாம். உத்தியோக சம்பந்தமாக வெளியூர்-வெளிநாடு செல்லும் முயற்சிகளில் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருந்தால் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டும் இல்லாமலிருக்கும்.

கலைஞர்களுக்கு: கலை சம்பந்தமான தொழில்களில் இருப்பர்களுக்கு எதிலும் சற்று தேக்க நிலை இருக்கும். புதிய வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். உங்களுடைய திறமையை அதிகப்படுத்திக் கொள்வதன்மூலம் வருமானம் குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் குறை கூறினாலும் அதனை பொருட்படுத்தாமல் உங்களுடைய கலைத்திறமை மேம்படுத்தக் கொண்டால் தகுந்த சமயத்தில் அது உங்கள் உயர்வுக்கு கை கொடுக்கும். அவ்வப்போது ஏற்படும் மறைமுக எதிர்ப்புகளை பக்குவமாகக் கையாண்டால் பிரச்சினைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும்.

விவசாயிகளுக்கு: விவசாயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தரமான விதைகள், பூச்சி மருந்து, உரம் முதலியவற்றைப் பயன்படுத்தி வந்தால் வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். அரசு சம்பந்தமான உதவிகளைத் தடையின்றி பெறுவதற்கு தகுந்தவர்களை அணுகுவது புத்திசாலித்தனம். கடன் தொகை செலுத்தும் பொழுது அதை உடனடியாக பதிவு செய்வதில் கவனமாக இருந்தால், வீண் நெருக்கடிகள், மன உளைச்சல் ஆகியவை தானே குறையும். மேலும் பருவ நிலை மற்றும் žதோஷ்ண நிலைக்கு ஏற்ற பயிர்களைத் தேர்வு செய்தால் உத்தமம்.

பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு: பொது பிரச்சினைகளைத் தீர்க்க காட்டும் ஆர்வத்தை, இல்லப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் காட்டி வந்தால், உறவுகளின் நிறம் மாறாமல் இருக்கும். சூழ்நிலையை ஆராய்ந்தபின் செயலில் இறங்கினால், முன் வைத்த காலை பின் வைக்க வேண்டியிராது. உடல் நலனை நல்ல விதமாக பராமரித்து வந்தால், மருந்துகளுக்கு செலவு செய்வது குறையும். வீண் வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தால், வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும் உணவு பழக்க வழக்கங்களில் விஷப்பரீட்சைகள் வேண்டாம்.

பரிகாரங்கள்: செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் திருமகளை துதித்து வர பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வருவதோடு கடன் தொல்லைகளும் குறையும். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு வெள்ளை மலர் சார்த்தி வழிபட்டு வர, தொழில் தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

Monday, May 9, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “guru peyarchi mithunam 2011”

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...